இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு.. அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டார் அதிபர்.!!

By Thiraviaraj RMFirst Published Mar 2, 2020, 11:48 PM IST
Highlights

இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசாணை வெளியிட்டுள்ளார்.  இலங்கையில் அதிபராக கோதபய ராஜபக்சேவும், பிரதமராக அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சேவும் பதவி வகித்து வருகின்றனர்.   
 
T.Balamurukan

இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசாணை வெளியிட்டுள்ளார்.  இலங்கையில் அதிபராக கோதபய ராஜபக்சேவும், பிரதமராக அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சேவும் பதவி வகித்து வருகின்றனர்.   

இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில் அதிபர் இந்த அரசாணையை பிறப்பித்துள்ள நிலையில் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த அரசாணை குறித்த விபரங்கள் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. 
 
click me!