சமூக ஊடகங்களில் இருந்து பிரதமர் மோடி திடீரென விலக முடிவு.!!

By Thiraviaraj RMFirst Published Mar 2, 2020, 11:17 PM IST
Highlights

இந்திய பிரதமர் மோடி மனதை பாதிக்கும் அளவிற்கு சமூக ஊடகங்கள் ஏதோ சேட்டையை காட்டியிருக்கிறது.இதனால் இந்திய பிரதமர் மோடி திடீரென எல்லா சமூக ஊடகங்களில் இருந்தும் வெளியேறலாமா என்று யோசித்து வருவதாக  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு அனைவரையும் அதிச்சியடையச் செய்திருக்கிறது.

T.Balamurukan

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்..,"இந்த ஞாயிறன்று எனது பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாக்ராம் மற்றும் யூ ட்யூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடக கணக்குகளில் இருந்தும் வெளியேறலாமா? என்று சிந்தித்தேன்?. மற்ற விபரங்களை விரைவில் அறிவிக்கிறேன்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.   இந்த அறிவிப்பு அனைவரையும் ஏன்? எதற்கு என்று மண்டையை குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். பிரதமர் ஏன் இப்படி சஸ்பென்ஸ் வைத்து பதிவிட்டிருக்கிறார் என்று ஊடகங்கள் குழம்பியிருக்கிறது.       

click me!