வேட்பாளர் பட்டியளோடு டெல்லி பறந்த தமிழக அமைச்சர்கள்..!! டோஸ் விட்ட அமித்ஷா.!! பதறிய எடப்பாடி.

By Thiraviaraj RMFirst Published Mar 2, 2020, 10:56 PM IST
Highlights

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அமைச்சர்கள் திடீரென சந்திதனர்.அப்போது ,தமிழகத்தில் குடியுரிமைச் சட்டம் குறித்த சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும், மாநிலங்களவை எம்.பி சீட் யார் யாருக்கு என்கிற லிஸ்ட குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.தமிழக அமைச்சர்கள் உள்துறை அமைச்சரை சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 

 

T.Balamurukan

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அமைச்சர்கள் திடீரென சந்திதனர்.தமிழகத்தில் குடியுரிமைச் சட்டம் கிளப்பும் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும், மாநிலங்களவை எம்.பி சீட் யார் யாருக்கு என்கிற லிஸ்ட குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.தமிழக அமைச்சர்கள் உள்துறை அமைச்சரை சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு இடங்களிலும் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் நிலையில் அவற்றை கையாள்வதற்கு என்று சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்திருக்கிறது.

இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசி வருகின்றனர்.  அவர்கள் இருவரும் சிஏஏ , என்.பி.ஆர் மற்றும் என்.சி.ஆருக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்தும் விதங்கள் குறித்தும் ஆலோசிப்பார்கள் என்றும் தெரிகிறது.இந்த சந்திப்பிற்கு மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஏற்பாடுகளை செய்துள்ளார். சென்னையில் தமிழக முதல்வர் பழனிசாமியை அவரது க்ரீன்வேஸ் இல்லத்தில் பாஜக தமிழகப் பொறுப்பாளர் முரளிதர ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜ்யசபா சீட்க்கு வேட்பாளர்கள் யார் என்பதை முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக அமைச்சர்கள் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.இந்த பயணத்தின் போது வேட்பாளர் பட்டியளோடு அமைச்சர்கள் சென்றிருக்கிறார்கள். பாஜக சொல்லும் வேட்பாளர்களுக்கே சீட் என்றும், இதில் முஸ்லீம் ,யாதவர்கள்,தலித்துகள் இடம் பெறும் வகையில் இருக்க வேண்டும் என்று டோஸ் விட்டிருக்கிறார் அமித்ஷா. பாஜக சார்பில் பொன்னார்,ஹெச்.ராஜா,ராதாகிருஷ்ணன் இவர்களில் யாருக்காவது லக்கி அடிக்கும் என்கிறது டெல்லி வட்டாரம்.எடப்பாடி கையில் இருக்கும் லிஸ்ட்டில் அன்வர்ராஜாவுக்கு ரெட் சிக்னல் கொடுத்திருக்கிறது பாஜக.பெண்கள் பட்டியலில் கோகுல இந்திராவும், தளவாய்சுந்தரமும் இடம்பெற்றிருப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
  

click me!