டிக்டோக் போட்டு ராஜீவ் காந்திக்கு அவமானம்... மன்னிப்பு கேட்டு மண்டியிட்ட நாம் தமிழரின் மானம்..!

By Thiraviaraj RMFirst Published Mar 2, 2020, 6:13 PM IST
Highlights

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணியை சேர்ந்த துரைமுருகன் பாண்டியன், ராஜீவ் காந்தி நினைவிடத்தில் டிக் டாக் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளார். 
 

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணியை சேர்ந்த துரைமுருகன் பாண்டியன், ராஜீவ் காந்தி நினைவிடத்தில் டிக் டாக் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளார். 

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் என்பவர் தனது நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது ராஜீவ்காந்தியின் நினைவு தூண் அருகே நின்றுகொண்டு, ஏற்கெனவே ராஜீவ் காந்தி பற்றி சீமான் சர்ச்சையாக பேசிய டயலாக்கை டிக் டாக் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் உள்ள நபர்களால் அதிகம் பகிரப்பட்டது. இந்தநிலையில் துரைமுருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்நிலையில் அவர் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், ’கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ஸ்ரீபெரும்புதூர் சென்றிருந்தேன். அங்கு ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு சென்று அங்கிருந்து ஒரு டிக் டாக் வீடியோ போட்டு இருந்தேன். அந்த வீடியோவை வெளியிட்டு சரியாக ஒரு மணி நேரத்தில் அதை அழித்து விட்டேன். இது தவறு, செய்யக்கூடாது என்று அதை அழித்து விட்டேன். ஆனால், அதற்குள் அந்த வீடியோவை டவுன்லோட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டார்கள்.

இன்று அதை பார்த்துவிட்டு ராஜீவ் காந்தியை நேசிக்கக் கூடியவர்கள் என்னை அழைத்து நீங்கள் இப்படி செய்தீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று நிறைய பேர் சொன்னார்கள். உண்மையில் ராஜீவ் காந்தியை அவரது நினைவிடத்தை கொச்சைப் படுத்த வேண்டியது எனது நோக்கமல்ல. அசிங்கப்படுத்த வேண்டியது எனது நோக்கமல்ல. இது எனது தனிப்பட்ட முறையில் இது சாதாரணமாக எடுத்த வீடியோ விளையாட்டுத்தனமாக எடுத்து விட்டேன். ஆனால், அது தவறு என்று நினைத்து உடனே அந்த வீடியோவை அழித்து விட்டேன். ஏதோ ஒரு வீடியோவை எடுத்து மீண்டும் பரப்பி அதை வெளியிட்டு அந்த வீடியோவால் உங்கள் மனது புண்பட்டிருந்தால், உங்கள் மனது காயப்படும் என்றால் அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். இனிமேல் இதுபோன்ற செய்திகள் நடக்காது’’என மன்னிப்பு கேட்டுள்ளார். 

யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல... pic.twitter.com/LkzqdX9jI3

— Duraimurugan pandiyan (@Saattaidurai)

 

click me!