பொருளாதார நெருக்கடியால் சிக்கி சீரழியும் இலங்கை.. முதல்வர் நிவாரண நிதிக்கு அள்ளிக்கொடுத்த விஜயகாந்த்.!

By vinoth kumar  |  First Published May 4, 2022, 1:49 PM IST

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் படகுகள் மூலமாக தமிழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். 


பொருளாதார நெருக்கடியில் சிக்கி சீரழிந்து வரும் இலங்கை மக்களுக்கு உதவ முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

 கடும் பொருளாதார நெருக்கடி

Tap to resize

Latest Videos

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் படகுகள் மூலமாக தமிழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிகள் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

undefined

முதல்வர் வேண்டுகோள்

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் நிதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட மு.க.ஸ்டாலின் திமுக  சார்பில் ரூ. 1 கோடி நிதி வழங்கப்படும் எனவும், திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். 

5 லட்சம் நிவாரணம்

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்  வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தேமுதிக சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

click me!