திமுக ஆன்மிகத்திற்கு எதிரான கட்சி என நாடு முழுவதும் திட்டமிட்டு சித்தரிக்கப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்?
தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விசுவநாதன் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் முதலமைச்சர் பொதுவானவர் எல்லா மதத்திற்கும் சம்பந்தப்பட்டவர், எல்லா மத பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லும் போது தீபாவளிக்கு மட்டும் ஏன் வாழ்த்து சொல்வது இல்லை என கேள்வி எழுப்பினார். இதனால் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது குறிக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, இது கொள்கை முடிவு எனவும் இது குறித்து யாரையும் நிர்பந்திக்க முடியாது என தெரிவித்தார்.
undefined
யாருக்கும் அடி பணிய மாட்டோம்
உடனே குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பேசியதில் தவறு ஏதும் இல்லை எனவும் அனைவருக்கும் பொதுவானவராக இருக்கக்கூடிய முதலமைச்சர் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை ஏன் என்றே கேள்வி எழுப்பினார். எனவே இதில் எந்த தவறும் இல்லையென்று தெரிவித்தார். இதன்காரணமாக சட்டப்பேரவையில் மீண்டும் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது அப்போது பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் எங்களுடைய கூட்டணி மதச்சார்பற்ற கூட்டணி, அந்த கூட்டணியின் மதச்சார்பற்ற அரசே தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி என்று பரப்பபடும் வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விசுவநாதன் பேசி வருகிறார். ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி திமுக என்ற வகையில் நாடு முழுவதும் திட்டமிட்டு சித்தரிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் யாருக்கும் அடிபணிந்து போக மாட்டோம் இது பெரியார் வழித்தடத்தில் அண்ணா உருவாக்கிய கட்சி கலைஞர் வழிநடத்திய கட்சி திராவிட மாடல் ஆட்சி, அடிபணிந்து போக மாட்டோம் என திட்டவட்டமாக தெரித்தார்