கருப்பர் கூட்டத்துக்கு நேர்ந்த அதே கதி.. யூ2 புரூட்டஸ்க்கு வரனும்.. கொந்தளிக்கும் அர்ஜூன் சம்பத்.

Published : May 04, 2022, 01:10 PM IST
கருப்பர் கூட்டத்துக்கு நேர்ந்த அதே கதி.. யூ2 புரூட்டஸ்க்கு வரனும்.. கொந்தளிக்கும் அர்ஜூன் சம்பத்.

சுருக்கம்

சேனல் மீது இந்து அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கருப்பர் கூட்டத்தின் மீது எடுத்த அதே நடவடிக்கை யூ2 புரூட்டஸ் மீதும் எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. சிவபெருமானை இழிவுபடுத்திய அச் சைனலின் மைனர் விஜயை கைது செய்ய வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்  நடத்தினர். சிவபெருமானை அவதூராக பேசும் மைனர் விஜய் மீது ஏன் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குகிறது என்றும் அர்ஜுன் சம்பத் கேள்வி  எழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு முருகப்பெருமானை இழிவுபடுத்தி பேசியதாக கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் பேசிய சுரேந்திரன்  என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ளார். இந்நிலையில் சிவபெருமானை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக யூடியூப் புரூட்டஸ் என்ற யூடியூப் சேனல் மீது இந்து அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சிதம்பரம் நடராஜரை அவதூறாக பேசுவதை கண்டித்தும், யூ2 புரூட்டஸ் மைனர் விஜய் என்பவரை கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் சிவபெருமான் சிதம்பரம் நடராஜர் குறித்து அவதூறாக பேசிய யூ2 புரூட்டஸ் என்ற சேனலை தடை செய்ய வேண்டும், ஏற்கனவே முருகப்பெருமானை அவதூறாக பேசிய  விவாகரத்தில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் முடக்கப்பட்டது.  அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது, அதேபோல அதில் பதிவிடப்பட்ட அவதூறு கருத்துக்கள் நிறுத்தப்பட்டன. எனவே கடவுள்கள் குறித்து அவதூறாக பேசுபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரின் மனைவி ஆன்மீக ரீதியாக கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்கிறார் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபுவும் இதேபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்கிறாரா.?

திமுக அரசும் அமைச்சர் சேகர்பாபுவும் சிவராத்திரி விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள் நாங்களும் இந்துக்களுக்கானவர்கள் என காட்டிக் கொண்டனர் சிதம்பர தத்துவம் என்பது எவ்வளவு சிறப்பானது, பெரியார் அண்ணா உள்ளிட்டவர்கள் குறித்து அவதூறாக பேசினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  ஆனால் சிவபெருமானை அவதூறாக பேசிய மைனர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன். யூ2 புரூட்டஸ் யூடியூப் சேனல் மீது ஸ்டாலின் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்  வலியுறுத்தியுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!