ஜெய்பீம் படத்திற்கு தாதா சாகிப் பால்கே விருது.. செம்ம காண்டான காயத்ரி ரகுராம்..

Published : May 04, 2022, 01:49 PM IST
ஜெய்பீம் படத்திற்கு தாதா சாகிப் பால்கே விருது.. செம்ம காண்டான காயத்ரி ரகுராம்..

சுருக்கம்

காவல் துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட இருளர் ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில்  மணிகண்டன் நடித்தார். இப்படம் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, தமிழக முதல்வரை படத்தை பார்த்துவிட்டு திரைப்படக்குழுவினரை பாராட்டியதுடன், பழங்குடியின மக்களுக்கு வேண்டிய சாதி சான்றிதழ், பட்டா உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் உடனடியாக அதிகாரிகள் நேரில் சென்று வழங்கவும் உத்தரவிட்டார்.

ஜெய்பீம் திரைப்படத்தில்  ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டனின் கதாபாத்திரமே முக்கியத்துவம் வாய்ந்தது ஆனால் அத் திரைப்பட நிறுவனம் அவரை துணை நடிகர் பட்டியலில் சேர்த்திருப்பது துரதிஷ்டவசமானது என நடிகை காயத்ரி ரகுராம் ஆதங்கம் தெரிவித்துள்ளார். ஜெய்பீம் திரைப்படத்திற்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காயத்ரி ரகுராம் இவ்வாறு அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார்.

திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் ஜெய் பீம். இது பழங்குடியின மக்கள் காவல்துறையின் அதிகார வெறிக்கு எப்படி இரையாகிறார்கள், எந்த அளவிற்கு அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதையும் வெளிச்சமிட்டுக் காட்டிய திரைப்படமாகும். இத்இத்திரைப்படம் சமூகத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். ஞானவேல் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் கடந்த ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தின் நாயகியாக லிஜி மோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்தனர். இது உலக அளவில் ரசிகர்களால் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது. நீதியரசர் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. சந்துரு கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக சூர்யா நடித்தார்.

காவல் துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட இருளர் ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில்  மணிகண்டன் நடித்தார். இப்படம் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, தமிழக முதல்வரை படத்தை பார்த்துவிட்டு திரைப்படக்குழுவினரை பாராட்டியதுடன், பழங்குடியின மக்களுக்கு வேண்டிய சாதி சான்றிதழ், பட்டா உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் உடனடியாக அதிகாரிகள் நேரில் சென்று வழங்கவும் உத்தரவிட்டார். அதே நேரத்தில் இப்படத்தில் வன்னியர்களின் அடையாள சின்னமான அக்னி கலசத்தை தவறாக சித்தரித்து விட்டதாக கூறி பாமக உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் ஜெய் பீம் படத்துடன் சேர்ந்து மொத்தம் 270  படங்கள் போட்டியிட்டன. அதில் இறுதிப்பட்டியல் வரை ஜெய் பீம் திரைப்படம் தேர்வானது, நிச்சயம் ஆஸ்கார் வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிடைக்கவல்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

 

ஆனால் இந்தியாவின் திரைப்படத் துறையில் மிகப்பெரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது இப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகையும் பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவியுமான காயத்ரி ரகுராம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்  தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார்.

அதில், தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம் திரைப்படத்திற்கு சிறந்த துணை நடிகருக்கான ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டனுக்கு விருது கிடைத்துள்ளது. நிஜவாழ்க்கையிலும் படத்திலும் ராஜாக்கண்ணு முக்கிய நாயகன். துணை வேடம் அல்ல, வாழ்த்துக்கள் மணிகண்டன்... அந்த கதாபாத்திரம் இல்லாத கதை இல்லை, துரதிருஷ்டவசமாக திரைப்பட நிறுவனம் அவரது பெயரை துணைப் பாத்திரம் பட்டியலில் சேர்த்துள்ளது என பதிவிட்டுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!