பி.ஜே.பி.யின் நிதியை சுருட்டினார் ! மணல் திருட்டு, கட்டப்பஞ்சாயத்தும் செய்தார்!: அடேங்கப்பா, எலிக்கறி அய்யா கண்ணுவுக்கு இத்தனை மூஞ்சிகளா?

By Vishnu PriyaFirst Published Apr 14, 2019, 7:03 PM IST
Highlights

மோடி மீது தமிழர்களுக்கு கடும் கடுப்பு வரவும், தமிழகத்தின் மீது மோடிக்கு வெறுப்பு வரவும் முக்கியமான காரணங்களில் ஒன்று அய்யாக்கண்ணு. டெல்லியில் விவசாயிகளை திரட்டி எலிக்கறி தின்று, அம்மணமாய் நின்று என்று இவர் நடத்திய போராட்டங்கள் சர்வதேச தளத்தில் மோடியின் பெயரை டேமேஜ் செய்தன. விளைவு ஏற்கனவே மோடி மனதில் எரிந்து கொண்டிருந்த தமிழக வெறுப்பு தீயில் இது ரெண்டு லிட்டர் டீசலை எக்ஸ்ட்ராவாக ஊற்றியது. 
 

மோடி மீது தமிழர்களுக்கு கடும் கடுப்பு வரவும், தமிழகத்தின் மீது மோடிக்கு வெறுப்பு வரவும் முக்கியமான காரணங்களில் ஒன்று அய்யாக்கண்ணு. டெல்லியில் விவசாயிகளை திரட்டி எலிக்கறி தின்று, அம்மணமாய் நின்று என்று இவர் நடத்திய போராட்டங்கள் சர்வதேச தளத்தில் மோடியின் பெயரை டேமேஜ் செய்தன. விளைவு ஏற்கனவே மோடி மனதில் எரிந்து கொண்டிருந்த தமிழக வெறுப்பு தீயில் இது ரெண்டு லிட்டர் டீசலை எக்ஸ்ட்ராவாக ஊற்றியது. 

அப்பேர்ப்பட்ட அய்யாக்கண்ணு, தேர்தல் நேரமான தற்போது மோடி மற்றும் பி.ஜே.பி.க்கு எதிராக விஸ்வரூபமெடுத்து, விவசாயிகளின் வாக்கு வங்கியை மிக முழுமையாக  அக்கூட்டணிக்கு எதிராக திருப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 7-ம் தேதியன்று டெல்லிக்கு பறந்து, அமித்ஷாவை சந்தித்து ‘விவசாயிகள் விஷயத்தில் மத்தியரசு எடுத்திருக்கும் முடிவு ஹேப்பி’ என்று சொல்லி, டோட்டலாக சரண்டராகி இருக்கிறார். 

இதன் பிறகு அய்யாக்கண்ணு மீது மிக மிக மோசமான விமர்சனங்கள் கிளம்பியுள்ளதோடு, அவரது பழைய கதைகளும் சந்தைக்கு வர துவங்கியுள்ளன. அந்த வகையில் அய்யாக்கண்ணு முன்பு பதவி வகித்த பாரதிய கிஷான் சங்கத்தில் தற்போது மாநில பொறுப்பிலிருக்கும் ஒருவர்  இவர் பற்றி பகிர்ந்திருக்கும் தகவல்கள் ஆர்.டி.எக்ஸ். ரகங்கள். 

அதன் ஹைலைட்ஸ் இதோ...”அய்யாக்கண்ணு பி.ஜே.பி.யில சில வருஷங்களுக்கு முன்னாடி சேர்ந்தார். திருச்சியில கட்சி பொறுப்பை கவனிச்சுட்டு இருந்தார். அவர் விவசாயிங்கிறதாலே பி.ஜே.பி.யை விட அதன் விவசாய பிரிவான பாரதிய கிஷான் சங்கத்தில் அவர் இருப்பது பொருத்தமுன்னு சொல்லி 2000-ம் வாக்கில் அவரை அங்கே மாற்றினாங்க. மாவட்ட பொதுச்செயலாளர் பொறுப்பு தந்தாங்க. நாலே வருஷத்தில் மாநில செய்தி தொடர்பாளரானார். அடுத்த ரெண்டு வருஷத்துல குஜராத்துக்கு போயி மோடியை சந்தித்தார் அய்யாக்கண்ணு. அவ்வளவுதான் கட்சிக்குள்ளே பெரிய பரபரப்பானார். அடுத்த வருஷமே அவருக்கு மாநில பொதுச்செயலாளர் பொறுப்பு கொடுத்தாங்க.

அய்யாக்கண்ணுவோட குணமே, எதைச் செய்தாலும் சுயலாப நோக்கு அதில் இருக்கும். பி.ஜே.பி.யின் பாரதிய கிஷான் சங்கத்தில் இருந்தப்ப தன்னோட செல்வாக்கைப் பயன்படுத்தி மணல் திருட்டு, கட்டப்பஞ்சாயத்து மாதிரியான செயல்களைப் பண்ணிட்டு இருந்தார். இது போக அமைப்பின் நிதியிலும் கைவெச்சார். இது அகில இந்திய தலைமைக்கு தெரிஞ்சு, அவரை எச்சரிச்சாங்க. ஆனா அவர் கேட்கலை. 

இந்த நேரத்துல அவரோட மகன் கோபிக்கண்ணு தி.மு.க.வுல இணைஞ்சார். பி.ஜே.பி.யோட விங்குல தன்னோட அப்பா இருக்குறது தி.மு.க.வுல தன்னோட வளர்ச்சிக்கு இடைஞ்சலா இருந்ததாலே அய்யாக்கண்ணுவை அதிலிருந்து வெளியேற சொன்னார் மகன். அதுதான் சரியான சந்தர்ப்பமுன்னு 2015-ல் விலகி எஸ்கேப் ஆகிட்டார்.
 


ஆனால் அதுக்குப் பிறகு இப்படி விவசாயிகளை சேர்த்து வெச்சுக்கிட்டு எங்க பி.ஜே.பி.க்கு எதிரா அவர் சீன் போட்டதுதான் பெரிய துரோகம்.” என்றார். 

அய்யாக்கண்ணு அமித்ஷாவை சந்தித்து பேசியதும், அதன் பின் மத்தியரசுக்கு ஆதரவாக அவர் மாறியதும் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி அவரை எக்காலத்திலும் நம்பப்போவதில்லை! என்று உறுமியுள்ளனர். 

ஆனால் அய்யாக்கண்ணுவோ தன் மீதான பாரதிய கிஷான் சங்க பதவி, மணல் கடத்தல் புகார், சங்க பண கையாடல், அமித்ஷாவிடம் இப்போது சரணடைந்து பணம் வாங்கியது ஆகியன பற்றி கேட்டால்...”எல்லாமே என் மீதான வதந்தி. துளி உண்மையில்லை. ஒரு நல்ல குடிமகனுக்கு அழகு, அரசாங்கம் தன்னை துன்புறுத்தும்போது எதிர்ப்பதும், தனக்கு நல்லது செய்கையில் வாழ்த்துவதும்தான். அதைத்தான் நான் செய்துள்ளேன். நான் என்னமோ பி.ஜே.பி.க்கு ஆதரவாக பிரசாரம் செய்வது போல் தப்பாக பேசுகின்றனர். இப்ப சொல்றேன்...தேர்தலில் விவசாயிகளுக்கு அளித்திருக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தை துவக்குவோம்.” என்கிறார். 

அடுத்தவாட்டி எலி கிடைக்கலேன்னா புலியை  கடிங்க அய்யாக்கண்ணு!

click me!