தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு தலைவலி... கருணாநிதி மகள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு..!

By vinoth kumarFirst Published Apr 14, 2019, 5:20 PM IST
Highlights

அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியினருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மகள் செல்வி மீது கொலை மிரட்டல் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியினருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மகள் செல்வி மீது கொலை மிரட்டல் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து, சனிக்கிழமை மாலை சூளைமேடு பகுதியில், செல்வி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அமமுக கூட்டணி இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் தெகலான் பாகவியை ஆதரித்து அக்கட்சியை சேர்ந்த ஹசீனா பேகம் மற்றும் ரிஷ்வானா பேகம் ஆகிய இரு பெண்கள் அதே பகுதியில் வாக்கு சேகரிப்பு மேற்கொண்டிருந்தனர்.

 

அப்போது வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது. இதை கண்டதும் செல்வி உட்பட திமுகவினர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனையடுத்து இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த ஹசீனா பேகம் மற்றும் ரிஷ்வானா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 

இதேபோல் எஸ்டிபிஐ கட்சி சார்ந்த ஹசீனா பேகம் அளித்த புகாரின் அடிப்படையில் கருணாநிதியின் மகள் செல்வி மற்றும் திமுக நிர்வாகிகள் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

click me!