தினகரனை மிக மோசமாக விமர்சித்த அமைச்சர், பொங்கி எழுந்த எதிர்க்கட்சிகள்!

By Vishnu PriyaFirst Published Apr 14, 2019, 6:48 PM IST
Highlights

2016-ல் அமைந்த ஜெயலலிதாவின் அமைச்சரவையின் உண்மையான ஆளுமை அவரது மறைவிற்குப் பிறகுதான் வெளிப்பட துவங்கியுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் இப்படியான நாகரிக மற்றும் சாதுர்ய நபர்கள் அமைச்சர்களாக இருந்ததாக சரித்திரமில்லை! எனுமளவுக்கு அ.தி.மு.க.வின் அமைச்சரவை கொடி உயரப்பறக்கிறது. 
 

2016-ல் அமைந்த ஜெயலலிதாவின் அமைச்சரவையின் உண்மையான ஆளுமை அவரது மறைவிற்குப் பிறகுதான் வெளிப்பட துவங்கியுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் இப்படியான நாகரிக மற்றும் சாதுர்ய நபர்கள் அமைச்சர்களாக இருந்ததாக சரித்திரமில்லை! எனுமளவுக்கு அ.தி.மு.க.வின் அமைச்சரவை கொடி உயரப்பறக்கிறது. 

ராஜேந்திர பாலாஜி, “திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, கருப்பணன், ஆர்.பி.உதயகுமார் வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன். வழக்கமாக, சொந்த மாவட்டத்தில் அரசியல் அதிரடித்தனம் செய்தார் என்பதுதான் இவர் மீதான குற்றச்சாட்டாக இருக்கும். ஆனால் இந்த தேர்தல் நேரத்தில் அவரது ’எல்லை மீறிய அர்ச்சனை வார்த்தைகள்’ கட்சி பேதமில்லாமல் மிக கடுமையான  விமர்சனத்தை வாங்கிக் கட்டியுள்ளன. 

அப்படி என்ன பேசினார் மணிகண்டன்?....”அ.ம.மு.க. என்பது ஒரு கட்சியா? அது ஆமை மூக்கன் கட்சி. அந்த கட்சிக்கெல்லாம் சின்னமும் கிடையாது, ஓட்டுக்களும் கிடையாது. குக்கரை வெச்சுக்கிட்டு ஓவரா பேசிட்டு இருந்தானுங்க. இப்ப அதுவும் போச்சு.  அந்த  குக்கர் சின்னத்தை கூட நாங்க சுயேட்சை வேட்பாளர் பெயர்ல வாங்கி வெச்சிருக்கோம். அதே ஆனந்த்-ங்கிற பெயர்ல ஒரு சுயேட்சை வேட்பாளரை நிறுத்தியிருக்கோம்.” என்று ஏக தெனாவெட்டாக பேசியிருக்கிறார். 

அமைச்சரின் இப்படியான பேச்சை எதிர்க்கட்சிகள் என்ன, அ.தி.மு.க.வினரே ரசிக்கவில்லை. தினகரனை இவ்வளவு கேவலமாக திட்டியது மட்டுமில்லை, தங்கள் கட்சியின் தேர்தல் ரகசிய வேலைகளை கூட ‘சுயேட்சையா ஒருத்தரை நாங்களே நிக்க வெச்சிருக்கோம்.’ன்னு சொன்னது என்ன மாதிரியான அரசியல்! என்பதுதான் அவர்களின் எரிச்சலே. “இப்படிப்பட்ட அமைச்சரை, நிர்வாகியையெல்லாம் எங்க கட்சி இதுவரைக்கும் பார்த்ததில்லை. எதிர்க்கட்சிக்காரனுக்கு ஏகத்துக்கும் சவால் விடலாம் தப்பில்லை. ஆனால், சொந்த கட்சியின் அரசியல் ரகசியத்தை இப்படியா போட்டு உடைக்கிறது? இது எந்த மாதிரியான தோற்றத்தைக் கொடுக்கும்....’ஆளுங்கட்சிக்காரனுங்க இவங்க என்ன வேணா பண்ணுவாங்க, ஆனால் தேர்தல் கமிஷன் தட்டிக் கேட்காது அப்படித்தானே! இவங்க கையில அந்த ஆணையமே இருக்கப்போய்தானே இந்தளவுக்கு ஒரு அமைச்சரே அதிகார திமிர்ல பேசுறார்?!’ அப்படின்னு மக்களே நினைப்பாங்க தானே! 

அமைச்சர் மணிகண்டன் மாதிரி ஒரு அடாவடி நிர்வாகியை நாங்க இதுவரைக்கும் பார்த்ததில்லை. சக கட்சிக்காரனுக்கு மதிப்பு, மரியாதை தர்ற குணம் அவரோட குணத்தில் இல்லவே இல்லை. அணிகள் இணைந்த பிறகு மிக மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட போற அமைச்சர்களில் இவரும் முக்கியமாக இருப்பார்.” என்றார்கள். 

அமைச்சரின் பேச்சுக்கு சர்வ கட்சிகள் தரப்பிலிருந்தும் மிக கடுமையான எதிர்ப்பு தலைதூக்கி இருக்கிறது. “அமைச்சரே இப்படி பேசி இருப்பது தவறான முன்னுதாரணம். தேர்தல் கமிஷன் தங்களுக்கு சாதமாக இருப்பதான பிம்பத்தை உருவாக்கியிருக்கிறார். ஆளுங்கட்சியின் நிர்பந்தங்களுக்கு ஏற்றபடி சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தால் அது அரசியல் சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் விரோதமானது.” என்கிறார். 

அமைச்சரின் பேச்சு பற்றி அ.ம.மு.க. என்ன நினைக்கிறது?....”சின்னமெல்லாம் எங்களுக்கு ஒரு விஷயமே இல்லை. குக்கரை நம்பியா கட்சி துவங்கினோம்? குக்கர் சின்னத்துக்காகவா பல லட்சம் தொண்டர்களும், பல லட்சம் மக்களும் தினகரனை ஆதரிக்கிறார்கள்? தலைவர் தினகரன் கையில் என்ன சின்னத்தை கொடுத்தாலும் அதை மிக குறுகிய காலத்தில் வெற்றிச் சின்னமாக மாற்றிடுவார். அந்த வகையில் பரிசுப்பெட்டகமும் அத்தனை வாக்காளர்களையும் சென்று சேர்ந்துவிட்டது. 

ஆனால் நாங்களே மறந்துவிட்ட குக்கரை நினைத்து நினைத்து இவர்க்ள் இன்னமும் பயந்து வெந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ‘ஆமை மூக்கன்’ என்று சக மனிதரை, அதுவும் கோடிக்கணக்கான தொண்டர்கள் கொண்டாடும் தலைவரை,  சில லட்சம் மக்களின் எம்.எல்.ஏ.வை. ஒரு காலத்தில் இவர்கள் அனைவரும் காலைபிடித்து தொங்கிய நபரை திட்டுவதென்பதை விமர்சிக்க வார்த்தைகளே இல்லை.” என்று போட்டுப் பொளந்திருக்கிறார் அ.ம.மு.க.வின் புகழேந்தி. 

ஆனால் அமைச்சர் மணிகண்டனோ “எனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை. அதிகார வரம்புகளை மீறி நான் எதுவும் பேசவில்லை, செய்யவில்லை.” என்கிறார்.
நம்பிட்டோம்!

click me!