எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம்... ஓ.பன்னீர்செல்வம் கூறுவது என்ன?

By Narendran SFirst Published Jan 10, 2023, 6:35 PM IST
Highlights

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் உரிய முடிவு எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் உரிய முடிவு எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவயின் முதல் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தார். இதுக்குறித்து சபாநாயகரிடம் முறையிட நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: ஆளுநரின் தமிழ்நாடு சர்ச்சைக்கிடையே அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்த காரியம்... வைரலாகும் புகைப்படம்!!

இந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் சட்டப்பேரவை கூடியது. இதில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா  மற்றும் கால்பந்தாட்ட வீரர் பீலோ உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்தோடு பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதை அடுத்து வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரை நானும் சந்தித்தேன்.

இதையும் படிங்க: பழனி கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த திமுக அரசு அனுமதி மறுப்பது வெட்கக்கேடு... சீமான் ஆவேசம்!!

இரங்கல் தீர்மானத்தின் மீது பேசுவது குறித்து பேசினேன், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் தான் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்றார். வரும் 16ம் தேதி வெளிமாநில தொழிலாளர்கள் வாக்களிப்பது தொடர்பாக புதிய திட்டம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் நடத்த இருக்கிற கூட்டத்தில் எங்கள்  சார்பாக யார் கலந்து கொள்வார்கள் என்பது குறித்து  விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

click me!