ஆளுநரின் தமிழ்நாடு சர்ச்சைக்கிடையே அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்த காரியம்... வைரலாகும் புகைப்படம்!!

By Narendran S  |  First Published Jan 10, 2023, 4:59 PM IST

ஆளுநரின் தமிழ்நாடு சர்ச்சைக்கிடையே அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாணவர்களுக்கு தமிழ்நாடு என்று எழுதிக்காட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


ஆளுநரின் தமிழ்நாடு சர்ச்சைக்கிடையே அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாணவர்களுக்கு தமிழ்நாடு என்று எழுதிக்காட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னையில் காசி தமிழ் சங்கமத்தை ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார்.

இதையும் படிங்க: கோவையில் ஆளுநர் ரவியின் உருவ பொம்மை எரிப்பு.. குண்டுகட்டமாக தூக்கிய போலீஸ்..!

Tap to resize

Latest Videos

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டை தமிழகம் என்று தான் அழைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆளுநரின் இந்த கருத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் டிவிட்டரில் #வாழ்கதமிழ்நாடு என்று பதிவிட்டனர்.

இதையும் படிங்க: கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக் கொடை ரூ.3,000 - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இதனால் டிவிட்டரில் தமிழ்நாடு என்ற வார்த்தை டிரெண்டானது. இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று சென்னை, ராயபுரம் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த ஸ்மார்ட் பலகையில் தமிழ்நாடு என்று எழுதிக் காட்டினார். இந்தப் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

click me!