சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று தொடங்கியது. தனது உரையை வாசிக்க தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு, அமைதிப்பூங்கா, சமூகநீதி, சுயமரியாதை, பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி ஆகிய வார்த்தைகளை தவிர்த்து விட்டு அடுத்த பக்கங்களுக்கு சென்றார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து ஆளுநர் பாதியில் வெளியேறிய நிலையில் திமுகவினர் கெட் அவுட் ரவி என்ற வாசகத்தோடு போஸ்டர் ஓட்டியுள்ள நிலையில், ஆளுநருக்கு ஆதரவாக பாஜகவினர் போஸ்டர் ஓட்டியுள்ளனர்.
சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று தொடங்கியது. தனது உரையை வாசிக்க தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு, அமைதிப்பூங்கா, சமூகநீதி, சுயமரியாதை, பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி ஆகிய வார்த்தைகளை தவிர்த்து விட்டு அடுத்த பக்கங்களுக்கு சென்றார்.
இதையும் படிங்க;- அசம்பளிய விட்டு ஓடிப்போன ஓடுகாலி கவர்னர் நம்ம ரம்மி ரெவி தான்.. தரக்குறைவாக விமர்சித்த திமுக ஐடி விங்..!
இதனையடுத்து ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு ஒப்புதல் அளித்த வாக்கியங்கள் மட்டும் சட்டப்பேரவை அவைகுறிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனையடுத்து ஆளுநரின் செயல்பாடுகளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். திமுகவின் ஐடிவிங் ஒரே படி மேலே போய் இந்த நாட்டுலையே ஏன் வோர்ல்டுலையே அசம்பளிய விட்டு ஓடிப்போன ஓடுகாலி கவர்னர் நம்ம ரம்மி ரெவி தான் என பதிவிட்டிருந்தனர்.
இதனையடுத்து, டுவிட்டரில் ஆளுநருக்கு எதிராக #GetOutRavi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இந்நிலையில், தமிழக ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் கெட் அவுட் ரவி என்ற வாசகத்தோடு திமுகவினர் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.
இந்நிலையில், திமுகவினருக்கு பதிலடி தரும் விதமாக ஆளுநருக்கு ஆதரவாக புதுக்கோட்டை முழுவதும் போஸ்டர் ஓட்டியுள்ளனர். அதில், ஆளுநரின் ஆளுமையே என்ற தலைப்பில் ஆளுநருக்கு ஆதரவாக பாஜக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் சீனிவாசன் ஒட்டியிருந்தார். ஆளுநர் vs ஆளுங்கட்சிக்கும் மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் திமுக - பாஜக இடையே போஸ்டர் யுத்தம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிர்ப்பு..! சென்னையில் முக்கிய இடங்களில் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய திமுக