அசம்பளிய விட்டு ஓடிப்போன ஓடுகாலி கவர்னர் நம்ம ரம்மி ரெவி தான்.. தரக்குறைவாக விமர்சித்த திமுக ஐடி விங்..!

By vinoth kumarFirst Published Jan 10, 2023, 1:43 PM IST
Highlights

உரையை வாசிக்க தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு, அமைதிப்பூங்கா,சமூகநீதி, சுயமரியாதை, பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி ஆகிய வார்த்தைகளை தவிர்த்து விட்டு அடுத்த பக்கங்களுக்கு சென்றார். 

திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அசம்பளிய விட்டு ஓடிப்போன ஓடுகாலி கவர்னர் என்று தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி எப்போது நியமிக்கப்பட்டரோ அன்றில் இருந்து தமிழக அரசுக்கும், ஆளுநருக்கு இடையான மோதல் போக்கு நாளுக்கு நாள் உச்சம் பெற்றுள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்திற்கு வருகை தந்த ஆளுநருக்கு திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். ஆன்லைன் ரம்மிக்கு ஒப்புதல் வழங்காததை கண்டித்து பாமகவினர் வெளிநடப்பு செய்தனர். எனினும், ஆளுநர் தனது உரையை நிறுத்தாமல் தொடர்ந்தார். 

இதையும் படிங்க;- நான் அப்பவே சொன்னேன்.. ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி.. எச்.ராஜா..!

இதனையடுத்து தனது உரையை வாசிக்க தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு, அமைதிப்பூங்கா,சமூகநீதி, சுயமரியாதை, பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி ஆகிய வார்த்தைகளை தவிர்த்து விட்டு அடுத்த பக்கங்களுக்கு சென்றார். 

இதனையடுத்து ஆளுநர் பேச்சுக்கு  எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு ஒப்புதல் அளித்த வாக்கியங்கள் மட்டும் சட்டப்பேரவை அவைகுறிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனையடுத்து ஆளுநரின் செயல்பாடுகள்  மரபுகளை மீறியது என்றும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், திமுகவின் ஐடிவிங் ஒரே படி மேலே போய் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்துள்ளார். 

இந்த நாட்டுலையே ஏன் வோர்ல்டுலையே அசம்பளிய விட்டு ஓடிப்போன ஓடுகாலி கவர்னர் நம்ம ரம்மி ரெவி தான் 🤣 pic.twitter.com/194u7HnJW5

— DMK IT WING (@DMKITwing)

 

இதுதொடர்பாக திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில்;- இந்த நாட்டுலையே ஏன் வோர்ல்டுலையே அசம்பளிய விட்டு ஓடிப்போன ஓடுகாலி கவர்னர் நம்ம ரம்மி ரெவி தான் என பதிவிடப்பட்டுள்ளது. திமுகவினர் ஆளுநர் என்று பாராமல் தரைக்குறைவாக விமர்சனம் செய்து வருவதாகவும் பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். 

இதையும் படிங்க;- ஆளுநருக்கென்றே திரைப்பட இயக்குநர் இந்த பெயரை முன்கூட்டியே வைத்திருக்கிறாரோ? பங்கமாய் கலாய்க்கும் காங்கிரஸ்.!

click me!