திரையரங்கில் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை.! விஜய், அஜித் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு

By Ajmal KhanFirst Published Jan 10, 2023, 1:43 PM IST
Highlights

பொங்கல் பண்டிகையையொட்டி அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகளுக்கு அனுமதி ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பாலாபிஷேகம் மற்றும் மிகப்பெரிய அளவிலான கட் அவுட் அமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு காட்சிக்கு அனுமதி ரத்து

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. திரைப்பட வெளியீட்டு விழாவை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். இதனையடுத்து இன்று நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளது. இதற்கான முன் பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்தநிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு சார்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  வரும் 13,14,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வாரிசு, துணிவு படங்களுக்கு அதிகாலை 4 மற்றும் 5 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.என்.ரவி தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்..! இல்லையென்றால் ஆளுநரை மாற்ற வேண்டிய நிலை வரும்-கமல்ஹாசன்

பால் அபிஷேகம் செய்ய தடை

மேலும் திரையரங்கில் பிரம்மாண்ட பேனர் மற்றும் பால் அபிஷேகம் செய்யவும் அனுமதி இல்லையென கூறப்பட்டுள்ளது.  திரைப்பட டிக்கெட் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணங்கள் அதிக விலையில் விற்பனை செய்தால் நடவடிக்கை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள்  புகார் அளிக்கும் வகையில் டிக்கெட்டிற்கு பின்பக்கத்தில் உயர் அதிகாரிகள் பெயர், பதவி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்டவைகள் அச்சிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .

தமிழகத்தில பல்வேறு திரையரங்கில் தற்போதே அதிகாலை காட்சிகளுக்கான டிக்கெட் விற்றுள்ளது. பொங்கல் பண்டிகை தினத்தில் நண்பர்களோடு தங்களுக்கு விருப்பப்பட்ட நடிகர்களின் திரைப்படங்களை காண காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இதையும் படியுங்கள்

உயிரற்ற கட்அவுட்டுகளுக்கு பாலாபி‌ஷேகம் செய்வதா.! அஜித்,விஜய்க்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்திய பால் முகவர்
 

 

 

click me!