அரசின் இலச்சினை புறக்கணிக்கும் ஆர்.என்.ரவி..! ஆளுநராக இருக்கவே தகுதியற்றவராகிறார்-திருமாவளவன் ஆவேசம்

By Ajmal KhanFirst Published Jan 10, 2023, 12:39 PM IST
Highlights

அரசு மரபுகளை மீறி செயல்படும் ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து  ஆளுநர் மாளிகை நோக்கி 13 ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வழியிலே காலை நீட்டி வம்பிழுக்கும் செயலாக ஆளுநரின் செயல் தெரிகிறது என குற்றம்சாட்டினார்.
 

ஸ்டாலினை சந்தித்த திருமா

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளார்களிடம் பேசிய அவர்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி  சார்பில் முதலமைச்சரை சந்தித்து ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துகளை தெரிவித்தேன். சட்டமன்றத்தில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து உடனடி எதிர்வினையாற்றிய முதலமைச்சரின் நடவடிக்கை போற்றுதலுக்குரியது என தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ்காரராக நடந்துகொள்ளும் ஆர்.என். ரவி..! மத்திய அரசு தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும்- கி.வீரமணி

உள்நோக்கத்தோடு செயல்படும் ஆளுநர்

ஆளுநர் சட்டப்பைரவை கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறியது உணர்ச்சிவசப்பட்டு செய்யவில்லையென்றும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தவே செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். சங்பரிவார்களின் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட செயல்திட்டங்களில் ஒன்று தான் என தெரிவித்தார். நாகலாந்தின் கவர்னராக இருந்தவர் ஆர் என் ரவி. அவை மரபுகள் என்னவென்று அவருக்கு தெரியும். முன் அனுபவம் உள்ளவர் இவ்வாறு செய்வது, உள்நோக்கத்துடன் திட்டமிட்ட ஒன்று. அதனை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக கூறினார்.

ஆர்.என் ரவிக்கு தகுதியில்லை

அரசு மரபுகளை மீறி செயல்படும் ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து  ஆளுநர் மாளிகை நோக்கி 13 ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தவர், வழியிலே காலை நீட்டி வம்பிழுக்கும் செயலாக ஆளுநரின் செயல் தெரிகிறது. பொங்கல் விழா அழைப்பிதழில் அரசின் இலச்சினை, தமிழ்நாட்டை புறக்கணிக்கிறார் என்றால் ஆளுநராக இருக்க ஆர்.என் ரவி தகுதியற்றவராகிறார். இதர ஜனநாயக சக்திகளுடன் இணைந்து ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என கூறினார். 

இதையும் படியுங்கள்

எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவு..! இரங்கல் தெரிவித்து தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைப்பு

click me!