எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவு..! இரங்கல் தெரிவித்து தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைப்பு

Published : Jan 10, 2023, 12:06 PM IST
எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவு..! இரங்கல் தெரிவித்து  தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைப்பு

சுருக்கம்

சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மற்றும் பேரவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கும் தமிழ் அறிஞர்கள், பிரபலங்கள், கால்பந்து விளையாட்டு வீரர் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக சட்டப்பேரவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.   

தமிழக சட்டசபை கூட்டம்

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆளுநரின் நடவடிக்கையை தொடர்ந்து, இன்று இரண்டாம் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று காலை 10 மணிக்கு அவை தொடங்கியதும், மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது அதைத் தொடர்ந்து, மறைந்த உறுப்பினருர்களான சின்னச்சாமி, தில்லை காந்தி என்கிற ஆதிமூலம், துரை கோவிந்தராஜன், சோமசுந்தரம் ஆகியோருக்கு மரியாதை செலுத்தி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழக கட்சிகளை மீண்டும் சீண்டிய ஆர்.என்.ரவி.! பொங்கல் விழா அழைப்பிதல்.! தமிழ்நாட்டில் இருந்து தமிழகமாக மாற்றம்

இரங்கல் தெரிவித்து ஒத்திவைப்பு

தொடர்ந்து தமிழறிஞர் முனைவர் க.நெடுஞ்செழியன், ஆரூர் தாஸ், தமிழறிஞர் ஒளவை நடராஜன், ஓவியர் மனோகர் தேவதாஸ், மருத்துவர் மஸ்தான், கால்பந்து ஜாம்பவான் பீலே ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 2 இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்ந்து. இன்றைய அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டு பேரவை நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஆர்எஸ்எஸ்காரராக நடந்துகொள்ளும் ஆர்.என். ரவி..! மத்திய அரசு தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும்- கி.வீரமணி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!
வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!