தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு.!ஆர்.என் ரவி உருவ பொம்மை எரிப்பு-போலீசாருடன் வாக்குவாதம் தள்ளு முள்ளுவால் பரபரப்பு

Published : Jan 10, 2023, 02:33 PM IST
 தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு.!ஆர்.என் ரவி உருவ பொம்மை எரிப்பு-போலீசாருடன் வாக்குவாதம் தள்ளு முள்ளுவால் பரபரப்பு

சுருக்கம்

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத தமிழக ஆளுநர் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

பாதியில் வெளியேறிய ஆளுநர்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தமிழ்நாடு, அமைதி பூங்கா, அம்பேத்கர், அண்ணா, காமராசர் உள்ளிட்ட வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். மேலும் ஆளுநர் உரையில் தமிழக அரசின் செயல்பாடு என்று கூறும் இடத்தில் மத்திய மாநில அரசு என சேர்த்து படித்தார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் ஆளுநரின் உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். இதனையடுத்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து ஆளுநர் பாதியிலேயே வெளியேறினார். இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது.  

திரையரங்கில் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை.! விஜய், அஜித் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு

 புதுச்சேரியில் போராட்டம்

இந்த நிலையில் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவியின் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி புதுச்சேரியில் காமராஜர் சிலை முன்பு ஒன்று கூடிய தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆளுநர் ரவியின் உருவ படத்தை செருப்பால் அடித்தும் அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக கட்சிகளை மீண்டும் சீண்டிய ஆர்.என்.ரவி.! பொங்கல் விழா அழைப்பிதல்.! தமிழ்நாட்டில் இருந்து தமிழகமாக மாற்றம்

உருவபொம்மை எரித்ததால் பதற்றம்

போராட்டம் காமராஜர் சிலை அருகே நடந்து கொண்டிருக்க அரவிந்தர் வீதி அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போராட்டக்காரர்கள் ஆளுநர் ரவியின் உருவ பொம்மையை எரித்து ரோட்டில் இழுத்து வந்தனர்.

போலீசாருடன் வாக்குவாதம்

இதனை அறிந்த போலீசார் போராட்டக்காரர்களிடன் இருந்த உருவ பொம்மை பிடுங்க முயன்றனர்.அப்போது போராட்டக்காரர்கள் அதையும் மீறி  உருவ பொம்மையை ரோட்டில் தர தர என்று இழுத்துச் சென்றதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து உருவ பொம்மை பிடுங்கி அப்புறப்படுத்திய போலீசார் நூற்றுக்கு மேற்பட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை கைது செய்தனர்.

இதையும் படியுங்கள்

அசம்பளிய விட்டு ஓடிப்போன ஓடுகாலி கவர்னர் நம்ம ரம்மி ரெவி தான்.. தரக்குறைவாக விமர்சித்த திமுக ஐடி விங்..!

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!