ஆளுநரின் உரையால் சட்டப் பேரவையில் அசாதரண சூழல்! மதிநுட்பத்தோடு செயல்பட்ட மு.க. ஸ்டாலின் -சபாநாயகர் பாராட்டு

By Ajmal Khan  |  First Published Jan 11, 2023, 1:34 PM IST

சட்டப்பேரவையில் அசாதாரண சூழல் ஏற்பட்ட நிலையில் சட்டப்பேரவையின் மாண்பை காத்திடும் வகையில் மதிநுட்பத்தோடு செயல்பட்டு முதலமைச்சர் காப்பாற்றியதற்கு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பாராட்டு தெரிவித்துள்ளார்.


சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்திற்கு பிறகு சட்ட சபையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது ஆளுநர் உரையின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை தலைவர் முன் நின்று எவ்வித கோஷங்களையும் எழுப்பியருக்க  கூடாது என்றும் அதனை தவிர்த்திருக்க வேண்டும் என தெரிவித்தார். எனவே வருங்காலத்தில் அதனை தவிர்க்கக்கூடிய வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பாடு இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  ஒருபோதும் ஆளுநர் முன் நின்று களங்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் எந்தவித செயலையும் செயல்படுத்த கூடாது என தெரிவித்தார். எதிர்ப்பை தெரிவிப்பவர்கள் தங்கள் இருக்கையில் இருந்து எதிர்ப்பை தெரிவித்துவிட்டு அதன் பின்னர் வெளிநடப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். 

Tap to resize

Latest Videos

சட்டப்பேரவை நிகழ்வுகள்..! செல்போனில் படம் பிடித்த ஆளுநரின் விருந்தினர்- உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்த திமுக

மதிநுட்பத்தோடு செயல்பட்ட ஸ்டாலின்

அதே நேரத்தில் பேரவை தலைவர் இருக்கை முன் கீழே அமர்ந்து தர்ணா போராட்டம் உள்ளிட்டவற்றில் ஈடுபட கூடாது என எச்சரிக்கை விடுத்தார். ஆளுநர் உரையானது அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு அதனை வாசிக்க ஆளுநரும் முழுவதும் இசைவு அளித்த நிலையில் அதில் வாசிக்கும் போது ஆளுநர் சில பகுதிகளைளை நீக்கியும், சில பகுதிகளை சேர்த்தும் வாசித்தார்.  இதனால் ஒரு அசாதார சூழல் நிலவியது. இந்த நிலையில் பேரவையின் மாண்பை காக்கும் வகையில் விதி எண் 17 தளர்த்தி ஆளுநர் உரை அச்சிடப்பட்டதை பதிவு செய்யுமாறு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மதிநுட்பத்தோடு செயல்பட்டு சட்டப்பேரவையின் மாண்பை பாதுகாத்துள்ளார்.

ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கியதற்கு எதிர்ப்பு.!சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்து கெத்து காட்டும் அதிமுக


மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரி

முதலமைச்சருக்கு தனது நன்றியை தெரிவிப்பதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார். மேலும் பிற மாநிலங்களுக்கு ஓர் முன்மாதிரியான சட்டமன்றமாகவும் தமிழகம் திகழ்வதாகவும், ஆளுநர் உரைக்கு எதிராக  தீர்மானத்தை கொண்டு வந்து பிற மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க கூடிய வகையில் முதலமைச்சரின் செயல்பாடு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்திருப்பதாக சபாநாயகர் அப்பாவு  கூறினார். 

இதையும் படியுங்கள்

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! சபாநாயகர் இப்படி செய்வதற்கு இதுதான் காரணம்!ஆளுங்கட்சியை அலறவிடும் இபிஎஸ்.!

click me!