சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! சபாநாயகர் இப்படி செய்வதற்கு இதுதான் காரணம்!ஆளுங்கட்சியை அலறவிடும் இபிஎஸ்.!

By vinoth kumar  |  First Published Jan 11, 2023, 1:05 PM IST

பத்திரிகைகளில் வந்த செய்தியின் அடிப்படையில் தான் அதனை அவையில் வைத்தோம். விருகம்பாக்கம் திமுக பொதுக்கூட்டதில் பாதுகாப்பில்  ஈடுபட்ட பெண் காவலருக்கு இரண்டு திமுகவினர் பாலியல் தொந்தரவு கொடுத்தார்கள். வழக்கு பதிவு செய்யாமல் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.


சபாநாயகர் நடுநிலையோடு இல்லை. பெரிய பதவி கிடைக்கும் என்ற அடிப்படையில் சபாநாகர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி;- தமிழ்நாட்டில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை சட்டமன்றத்தில் பேசவே கருப்புச் சட்டை அணிந்து வந்தோம். சட்டப்பேரவையில் சபாநாயகர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் மக்களின் பிரச்சனையை சட்டப்பேரவையில் பேச அதிமுகவுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. தமிழகத்தில் நாள்தோறும் வழப்பறி, கொள்ளை, கொலை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில்  சட்டம் ஒழுங்கை பாதுகாக்க விடியா திமுக அரசு தவறிவிட்டது என குற்றம்சாட்டினார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சட்டப்பேரவை நிகழ்வுகள்..! செல்போனில் படம் பிடித்த ஆளுநரின் விருந்தினர்- உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்த திமுக

மேலும், போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. கஞ்சா அதிகளவு விற்பனையாகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி பகுதிகளில் அதிகம் விற்பனையாகிறது. ஆனால் அதனைப் பற்றி அவையில் பேச அனுமதிக்கவில்லை. தினந்தோறும் கஞ்சா பிடிபட்டதாக செய்தி வருகிறது. பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அதனை கண்டித்து வெளிநடப்பு செய்தோம். சபாநாயகர் நடுநிலையோடு் இல்லை. பெரிய பதவி கிடைக்கும் என்ற அடிப்படையில் சபாநாகர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

பத்திரிகைகளில் வந்த செய்தியின் அடிப்படையில் தான் அதனை அவையில் வைத்தோம். விருகம்பாக்கம் திமுக பொதுக்கூட்டதில் பாதுகாப்பில்  ஈடுபட்ட பெண் காவலருக்கு இரண்டு திமுகவினர் பாலியல் தொந்தரவு கொடுத்தார்கள். வழக்கு பதிவு செய்யாமல் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு நாள் கழித்து தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புதுக்கோட்டையில் தீண்டாமை பற்றி பேச இருக்கிறோம் அரசு மறைத்து மறைத்து செய்தி வெளியிட்டு கொண்டிருக்கிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். ஊடக நண்பர்கள் சிந்திக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  ஷாக்கிங் நியூஸ்.. திரையரங்கு முன்பு அஜித் ரசிகர் உயிரிழப்பு - துணிவு பட கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த சோகம்..!

click me!