அனைத்து குடும்பங்களுக்கும் ஸ்மார்ட்ஃபோன்….. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Jan 3, 2019, 8:39 PM IST
Highlights

ஸ்மார்ட்ஃபோன்கள் உதவியால்தான் அரசு அளிக்கும்  அனைத்து சேவைகளையும் பெற முடியும் என்பதால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசமாக ஸ்மார்ட்ஃபோன்கள் வழங்கப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாயு நாயுடு அறிவித்துள்ளார்.

இது தேர்தல் காலம் என்பதால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும் ஆளும் அரசுகளும் தங்கள் இஷ்டப்படி புதிய, புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. கடந்த ஆண்டு இறுதியில் 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற தேர்லின்போது காங்கிரஸ் கட்சி பல்வேறு சலுகைகளை அறிவித்து  3 மாநிலங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது,

அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலையும்  கணக்கில்கொண்டுதான் இந்த விவசாயக் கடன் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் தமிழகத்தில் எதிர்வரும பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் நாடாளுமன்ற மற்றும் 20 தொகுதிகளின் இடைத் தேர்தல் ஆகியவற்றை கணக்கில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமராவதியில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, ஸ்மார்ட்போன்களின் உதவியால் சாதாரண மக்களும் அரசின் ஆன்லைன் சேவைகளைப் பெறமுடியும். எனவே அனைத்துக் குடும்பங்களுக்கும் ஸ்மார்ட்போன்கள் விநியோகிக்கப்படும் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ஆந்திரா  கடந்த நான்கரை ஆண்டுகளில் சராசரியாக 10.52 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருந்தது. அதேநேரம், தெலங்கானாவின் வளர்ச்சி விகிதம் 9.7 சதவிகிதமாகவும், தேசிய சராசரி 7.3 சதவிகிதமாகவும் இருக்கிறது என்றார்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 2013-14ஆம் ஆண்டில் 4.64 லட்சம் கோடியிலிருந்து, 2017-18 நிதியாண்டில் ரூ.8.04 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 73 சதவிகித வளர்ச்சியாகும். இந்த மாநிலத்துக்கு  அதிகப்படியான வருவாய் பற்றாக்குறை இருந்தாலும், தெலங்கானாவை விட வேகமான வளர்ச்சியை பதிவுசெய்துள்ளோம் என பெருமிதத்துடன் தெரிவித்தார்

click me!