பிறந்ததுமே திமுக உறுப்பினரான உதயநிதி... பிறந்த குழந்தை எப்படி கட்சிக்கு களப்பணி செய்யும்? நெட்டிசன்களை குழப்பிவிட்ட திமுக உ.பி!

By sathish kFirst Published Jan 3, 2019, 7:04 PM IST
Highlights

1977ல் பிறந்த உதயநிதி, அதே ஆண்டு திமுகவின் உறுப்பினராக சேர்ந்துள்ளதாக தகவல்கள் திமுக உடன்பிறப்புகள் விருப்பமனு படிவத்தில் குறிப்பிட்டு நெட்டிசன்ஸை குழப்பி விட்டுள்ளனர்.

கருணாநிதி மறைவை அடுத்து அவரது நடக்க இருக்கும் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட போகும் திமுக வேட்பாளர் யார் என்பது குறித்து திமுகவில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. தற்போது போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், திருவாரூரில் போட்டியிட திமுக சார்பாக நிறைய பேர் விருப்ப மனுக்கள் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. இன்று காலையிலேயே இதற்காக சிலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக  விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். 

இந்த நிலையில், திடீர் திருப்பமாக திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது ரசிகர்கள், திமுக உபிக்கள்   சார்பில்  இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தனர். இவரது விருப்ப மனுவும் பரிசீலனையில் உள்ளது. 

இதனையடுத்து, அவர்கள் கொடுத்த அந்த விருப்ப மனுவில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த வருடம் 1977 என்றும், அவர் திமுகவில் உறுப்பினரான வருடம் 1977 என்றும் உள்ளது. அதாவது உதயநிதி ஸ்டாலின் பிறந்தவுடனே திமுக  உறுப்பினரானதாக இருப்பதாகவும், களப்பணிகள் செய்திருப்பதாகவும் திமுக உபிக்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் நெட்டிசன்களோ, பிறந்த பச்சிளம் குழந்தை எப்படி ஒரு கட்சியில் களப்பணி எப்படி செய்யும்  குழப்பத்தில் உள்ளார்களாம், ஆனால் உபிக்களோ, இதுபற்றி இன்னும் வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறது.

click me!