எம்.ஜி.ஆர்- ஜெயலலிதாவை தாண்டி வரலாற்றுல இடம்பிடிக்கணும்... அசரடிக்கும் எடப்பாடியின் சபதம்!

By Thiraviaraj RMFirst Published Jan 3, 2019, 5:29 PM IST
Highlights

திருவாரூர் தேர்தலில் வெற்றிபெறும் வழிகளை இண்டு இடுக்கெல்லாம் புகுந்து ஆராய்ந்து வருகின்றன அரசியல் கட்சிகள். என்ன விலை கொடுத்தேனும் வெற்றிபெற்று எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சாதிக்காததை இந்த வெற்றியின் மூலம் பதிவு செய்தே ஆக வேண்டும் என துடியாய் துடித்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. 

திருவாரூர் தேர்தலில் வெற்றிபெறும் வழிகளை இண்டு இடுக்கெல்லாம் புகுந்து ஆராய்ந்து வருகின்றன அரசியல் கட்சிகள். என்ன விலை கொடுத்தேனும் வெற்றிபெற்று எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சாதிக்காததை இந்த வெற்றியின் மூலம் பதிவு செய்தே ஆக வேண்டும் என துடியாய் துடித்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

 

திமுக வென்ற தொகுதி என்பதால் திருவாரூரை மலைபோல நம்பி இருக்கிறார் மு.க.ஸ்டாலின். அவருக்கு மு.க.அழகிரி வடிவில் ஆப்பு வராமல் இருக்கும் வரை பிரச்னை இல்லை. தனது பலத்தை காட்ட ஆர்.கே.நகரைவிட திருவாரூர் முக்கியம் என புஜபலம் காட்டத்துடிக்கிறார் டி.டி.வி.தினகரன். அத்தோடு தனது நம்பிக்கைக்குரியவராக இருந்த செந்தில் பாலாஜியை இழுத்துக் கொண்ட திமுகவுக்கு திருவாரூரில் அடிகொடுக்க வேண்டும் என்பதும் அவரது நோக்கமாக இருக்கிறது. அதிமுகவுக்கோ இது வாழ்வா சாவா பிரச்னை. கட்சியையும் ஆட்சியையும் கரைசேர்க்க அதிமுகவுக்கு அக்னி பரிட்சையாக அமைத்து விட்டது திருவாரூர்.

 

அதிமுகவில், அமைச்சர் காமராஜின் நண்பரான கலியபெருமாள் வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதேபோல் 2016ல் கருணாநிதியை எதிர்த்து நின்று டெபாசிட் வாங்கிய பன்னீர்செல்வம் பெயரும் பரிசீலனையில் இருக்கிறது. ஆனாலும், வேட்பாளர்கள் போட்டியிட தயங்குவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் எடப்பாடியின் எண்ணம் தாறுமாறாக வேறு மாதிரியாக இருக்கிறது. திருவாரூரில் 1962 முதல் நடைபெற்று வரும் தேர்தலில் இதுவரை அதிமுக வேட்பாளர் அங்கு வெற்றி பெற்றதாக சரித்தரமே இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் மட்டுமே மாறி மாறி வெற்றிபெற்றுள்ளன. அந்த குறையை தீர்க்க வேண்டும் என நினைக்கிறாராம் எடப்பாடி. 

திருவாரூர் தொகுதியில் எம்.ஜி.ஆர். இருந்தபோதும், ஜெயலலிதா இருந்தபோதும் அதிமுகவால் வெற்றிபெற முடியவில்லை. இந்தத் தேர்தலில் அந்தக் குறையை போக்க நாம் வெற்றிபெற்றே ஆக வேண்டும்.  அதிமுக வரலாற்றில் எம்.ஜி.ஆர். சாதிக்க முடியாததை, ஜெயலலிதா சாதிக்க முடியாததை எடப்பாடி சாதித்தார் என்று மக்களை பேச வைக்க வேண்டும். அதற்காக என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை என தனக்கு நெருக்கமான அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருகிகிறார் எடப்பாடி. 

click me!