அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் !! முதலமைச்சர் அதிரடி உத்தரவு !!

Published : Sep 19, 2019, 11:15 PM IST
அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் !! முதலமைச்சர் அதிரடி உத்தரவு !!

சுருக்கம்

பஞ்சாப் மாநிலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில  முதலமைச்சராக அம்ரீந்தர் சிங் உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் அரசு  பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று  காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர்  அம்ரீந்தர் சிங் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.  இதில் நடப்பு நிதியாண்டில் அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதன்படி வரும் டிசம்பரில் முதற்கட்டமாக, இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், அரசு பள்ளிகளில்  11,12 ஆம் வகுப்புகளில்  படிக்கும் ஸ்மார்ட் போன் இல்லாத மாணவிகளுக்கு  ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை