ஆள்மாறாட்டத்துக்கு வழிவகுக்கும் நீட் தேவையா..? மோடி, எடப்பாடி அரசுகளுக்கு மு.க. ஸ்டாலின் அதிரடி கேள்வி!

By Asianet TamilFirst Published Sep 19, 2019, 10:02 PM IST
Highlights

விசாரணையில், நீட் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர் இங்கே படிக்கவில்லை என்பது தெரியவந்தது. தேனியில் படிக்கும் மாணவர் ஆள் மாறாட்டம் செய்து படித்துவருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வழங்கும்  நீட் தேர்வு கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, கலந்தாய்வு மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பில்  படித்து வருகிறார். இந்த மாணவரைப் பற்றி மருத்துவக் கல்லூரி டீன்  ராஜேந்திரனுக்கு மின்னஞ்சலில் புகார்கள் வந்தன. சம்பந்தப்பட்ட மாணவரை அழைத்து டீன் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாகப் பேசியதாக தெரிகிறது. சென்னை மாணவரின் பெற்றோரை தேனிக்கு வரவழைத்தும் விசாரித்தனர். 
விசாரணையில், நீட் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர் இங்கே படிக்கவில்லை என்பது தெரியவந்தது. தேனியில் படிக்கும் மாணவர் ஆள் மாறாட்டம் செய்து படித்துவருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து  கல்லூரி டீன் ராஜேந்திரன்  போலீசில் நேற்று புகார் கொடுத்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகிறார்கள்.
இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துவருகிறது, ஆள்மாறாட்டம் செய்து எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்க வழிசெய்யும் நீட் தேர்வை இனியும் தொடர அனுமதிக்கலாமா என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், “பிளஸ் டூ பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித் சூரியாக்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வழங்கும்  நீட் தேர்வு கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா?  மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும், அதற்குத் துணைபோகும் அடிமை அதிமுக அரசையும் அம்பலப்படுத்துவோம்!” என பதிவிட்டுள்ளார்.

click me!