அடிமை அண்ணாமலை .. பாஜகவை டார்டாரா கிழித்து தொங்கவிட்ட வைத்தியலிங்கம்..

By Ezhilarasan BabuFirst Published Aug 17, 2022, 1:05 PM IST
Highlights

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  அக்கட்சிக்கு கிடைத்த மிகச் சிறந்த அடிமை என திமுக சட்டத்துறை செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  அக்கட்சிக்கு கிடைத்த மிகச் சிறந்த அடிமை என திமுக சட்டத்துறை செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். மதுரையில் செல்வாக்கு நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்த  பிடிஆர் நன்கு படித்தவர், அறிவாளி என்பதாலும் அவர் நிர்மலா சீதாராமனை கேள்வி கேட்கிறார் என்பதனால் அவரை பாஜகவினர் எதிர்க்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி நடத்திய தாக்குதலில்  தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நிதியமைச்சர் பிடிஆர் அங்கு வருகை தந்தார். அதே நேரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அங்கு வருகை தந்தார், அப்போது அவரை வரவேற்க அங்கு ஏராளமான பாஜகவினர் கூடியிருந்தனர். அப்போது பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பாஜகவுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்: அமைச்சர் கார் மீது காலணி வீச்சு..பதுங்கி இருந்த பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் ..செல்போன் மூலம் சிக்கிய பின்னணி

இது அரசு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, இதில் மரபை மீறி அரசியல் கட்சி  தலைவர் செயல்பட முடியாது என அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் அஞ்சலி செலுத்தி விட்டு பிடிஆர் வெளியில் வரும்போது அவரது கார் மீது பாஜக தொண்டர்கள் காலணி வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் போலீசார் அவர்களை தடுத்து அமைச்சரை அனுப்பி வைத்தனர், இந்த விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. பாஜகவினரின் இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: திமுகவில் இணைகிறாரா பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்..? அவரே சொன்ன பரபரப்பு தகவல்

இந்நிலையில் பாஜகவின் மதுரை மாவட்ட செயலாளராக இருந்த டாக்டர் சரவணன் அக்காட்சியில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் பாஜகவினர் தன்னை மதரீதியாக செயல்பட சொல்லி நெருக்கடி கொடுத்து வந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். பாஜக ஒரு மதவாதக் கட்சி, வெறுப்புப் பிரச்சாரத்தை மையமாக வைத்து அரசியல்  செய்யும் காட்சி என்றும் அவர் கூறிவருகிறார், இந்நிலையில் திமுகவின் சட்டத்துறை இணைச் செயலாளரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான வைத்திலிங்கம் பாஜகவையும் அக்கட்சி தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் விவரம் பின்வருமாறு:-

சமீப காலத்திலே பாரதிய ஜனதாவுக்கு கிடைத்திருக்கிற வாய்ச்சொல் மிக்க ஒரு திறமையான அடிமைதான் அண்ணாமலை, திரைப்படத்தில் வருகிற நகைச்சுவை காட்சிதான் ஞாபகத்திற்கு வருகிறது, நமக்கு கிடைத்திருக்கிற அடிமைகள் எல்லாம் புத்திசாலிகள் ஆனால்  வாய்தான் நீளம் என்று வரும், அது போலதான் இருக்கிறது அந்த கட்சியின் நிலை, தற்போது அக்கட்சியில் இருந்து வெளிவந்திருக்கும் டாக்டர் சரவணன் அக்காட்சி குறித்து கூறியிருக்கிறார், அவர் எந்த அளவிற்கு மன நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார், எந்த அளவுக்கு அவருக்கு அக்கட்சி நெருக்கடி கொடுத்துள்ளது என்பது அவரின் வார்த்தைகளில் தெரிந்துகொள்ள முடிகிறது. 

மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் எல்லாமாக ராணுவ வீரருக்கு அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள், ஆனால் பாஜகவினர் மட்டும் மரபை மீறி  விமான நிலையம் வந்தது தான் பிரச்சனைக்கு காரணம், இதைதான் பிடிஆர் சொல்லியிருக்கிறார், இப்போது பாஜகவின் நிலைமை என்னவென்றால் அக்கட்சிக்கு வந்தவர்களை விட அக்கட்சியிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் நான் 30 ஆண்டு காலம் பாஜகவிலிருந்திருக்கிறேன், 

அவர்கள் யார் என்பது எனக்கு நன்றாக தெரியும். அவர்கள் யாரை எப்படி, எப்போது பயன்படுத்துவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது, ஆனால் அவர்களை ஆட்டுவிக்கும் சக்தி எங்கோ உள்ளது, இதைதான் தலைவர் கலைஞர் அவர்கள் பாஜக என்பது ஆக்டோபஸ் என்று கூறுவார். 
 

click me!