அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்து.. பாஜக நிர்வாகிக்கு கடிவாளம் போட்ட நீதிமன்றம்..!

By vinoth kumar  |  First Published Nov 17, 2022, 1:29 PM IST

தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை, தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் ட்விட்டரில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.


அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை, தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் ட்விட்டரில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்தும் அமைச்சர் செந்தில் பாலாஜியை நிர்மல் குமார் விமர்சித்திருந்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- கழுவி கழுவி ஊற்றி விட்டு.. பணத்திற்காக சுயமரியாதையை அடகு வைத்தவர் கோமாளியா? உத்தமன் அண்ணாமலை கோமாளியா? BJP

undefined

இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை வெளியிட நிர்மல் குமாருக்கு தடை விதிக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், அவதூறு பேச்சு குறித்து வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியும், நிர்மல்குமார் தொடர்ந்து அவதூறாக பேசிவருவதாக குற்றம் சாட்டினார். 

இதையடுத்து,  அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி  நிர்மல் குமாருக்கு  உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

இதையும் படிங்க;-  மழை பெய்தாலே கரெண்ட் கட் பண்ணிடுவாங்க என்று மக்கள் நினைக்கும் சூழல் இப்போது இல்லை.. அமைச்சர் செந்தில் பாலாஜி.!

click me!