"ஒற்றை தலைமை காலத்தின் கட்டாயம்.. ஓபிஎஸ் புரிஞ்சுக்கணும்" குண்டை தூக்கி போடும் ஓ.எஸ் மணியன்

By Raghupati RFirst Published Jun 19, 2022, 4:47 PM IST
Highlights

AIADMK : சமரச பேச்சுவார்த்தை நடத்த வந்த தம்பிதுரை, செங்கோட்டையனிடம் ஓபிஎஸ் திட்டவட்டமாக இவ்வாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது . இரட்டை தலைமை நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி Vs பன்னீர்செல்வம்

அதிமுக இப்பொழுது உள்ள சூழலுக்கு ஒற்றை தலைமை அவசியம் என கட்சியின் நிர்வாகிகளும் , தொண்டர்களும் குரல் எழுப்பியுள்ளனர்.  சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி,  உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி என அதிமுகவின் பலம் குறைந்து வருவதால்,  கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்று கோரிக்கை வலுத்துள்ளது.  ஆனால் ஒற்றை தலைமை என்பது தேவையில்லாதது என ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.  

அதிமுக

இருப்பினும் கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி இருப்பதால் அவர் கட்சியின் அடுத்த தலைவராக தேர்வு தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.  இதனிடையே ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர். சமரச பேச்சுவார்த்தை நடத்த வந்த தம்பிதுரை, செங்கோட்டையனிடம் ஓபிஎஸ் திட்டவட்டமாக இவ்வாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது . இரட்டை தலைமை நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க : AIADMK : அதிமுகவில் திருத்தங்கள் செய்ய கூடாது.. நீதிமன்றத்திற்கு பறந்த மனு.. குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள் !

ஒற்றை தலைமை அவசியம்

அத்துடன் ஒற்றை  தலைமை குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவந்தால் பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி  வைக்க நேரிடும் என பன்னீர்செல்வம் கூறியதாகவும் தெரிகிறது.  இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ‘அதிமுக  விவகாரத்தில், மோடி தலையிட்டதாக கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து. அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று தொண்டர்கள்  விரும்புகின்றனர்.அதிமுகவில் ஒற்றை தலைமை அவசியம். அது காலத்தின் கட்டாயம்’ என்று கூறினார்.

இதையும் படிங்க : AIADMK : எடப்பாடிக்கு பதவியை விட்டு கொடுங்க ஓபிஎஸ்.. இதான் நியாயம் - ராஜன் செல்லப்பா அதிரடி

click me!