இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் இபிஎஸ் வெளியே போய் நின்றால் 500 ஓட்டுகள் கூட வாங்க முடியாது- புகழேந்தி விளாசல்

Published : Jun 19, 2022, 03:55 PM ISTUpdated : Jun 19, 2022, 04:02 PM IST
இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் இபிஎஸ் வெளியே போய் நின்றால் 500 ஓட்டுகள் கூட வாங்க முடியாது- புகழேந்தி விளாசல்

சுருக்கம்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சின்னாபின்னமாகி வருகிறது, அரசியலில் ஒரு சர்வாதிகாரி போல் செயல்படுவதாக அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கடும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

அதிமுக சின்னா பின்னமாகி வருகிறது

அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான பிரச்சனை அதிகரித்துள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைபாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக மூத்த நிர்வாகிகள் தனித்தனியாக சந்தித்து தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த்தாக தெரிவித்தவர்,  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சின்னாபின்னமாகி வருவதாகவும், அரசியலில் ஒரு சர்வாதிகாரி போல் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவதாக குற்ம்சாட்டினார். சசிகலா பழனிச்சாமிக்கு ஆட்சியை கொடுத்தார் ஆனால் அவர் விசுவாசமாக இருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.  மனதிற்குள் காழ்புணர்சியை வைத்துக் கொண்டு எங்களை போன்றவர்களை கட்சியிலிருந்து நீக்கியவர் தான்  எடப்பாடி பழனிச்சாமி என்றும் தமிழகத்தில் 4 ஆண்டுகளாக கொள்ளையடித்தவர் தான்  பழனிச்சாமி என கூறினார். 

500 ஓட்டுகள் கூட வாங்க முடியாது

 இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் பழனிச்சாமி வெளியே போய் நின்றாள் 500 ஓட்டுகள் கூட வாங்க முடியாது  என்றும் எதிர்க்கட்சிப் பதவியை வாங்கி எடப்பாடி பழனிச்சாமி ஒரு வருடம் ஆகிறது, திமுகவில் ஊழலைப் பற்றிப் பேச எடப்பாடி பழனிச்சாமி தயாராக உள்ளாரா என்று கேள்வி எழுப்பியவர், பாஜக தலைவர் அண்ணாமலையை எதிர்க்கட்சித் தலைவர் என்று சொல்லும் சூழலை உருவாக்கியவர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிச்சாமி போன்ற முட்டாள்களை பிரதமர் நரேந்திர மோடி வழி நடத்த மாட்டார்  என்றும் அதிமுகவை விட்டு எடப்பாடி பழனிச்சாமி வெளியேற வேண்டும் என்றும் பேசிய அவர்,  இரட்டைக் குழல் துப்பாக்கி, இரட்டை கோபுரம் என்று அப்போது கூறிய ஜெயக்குமார் இப்போது எப்படி ஒற்றைத் தலைமையைப் பற்றி பேசுகிறார் என்றும் கேள்வி எழுப்பினார். ஓ.பன்னீர் செல்வம் இல்லாமல் பொதுக்குழுவை நடத்த முடியாது என தெரிவித்தவர், தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி இல்லையென்றும் ஓ.பன்னீர் செல்வம் தான் இருப்பதாக கூறினார்.

இதையும் படியுங்கள்

OPS vs EPS : நள்ளிரவு வரை நீடித்த ஆலோசனை..!ஒற்றை தலைமை தனி தீர்மானம் தயார்...! பொருளாளர் ஆகிறாரா ஓபிஎஸ்..?

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!