
ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதியில் ஏப்ரல் 12ம் தேதி, நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைதொடர்ந்து அனைத்து கட்சிகளும் ஆர்.கே. நகர் இடை தேர்தலில், போட்டியிட களம்
இறங்கிவிட்டன.
அதிமுகவின் 3 அணிகளில் தீபா தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன் களத்தில் இறக்கப்படலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனாலும், ஓரிரு நாட்களில் வேட்பாளரை அறிவிப்பதாக ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் சசிகலா அணியில் யாரை வேட்பாளரை அறிவிப்பது என பெரும் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திமுக சார்பில், ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், மனுவை பெற்று கட்சி தலைமையிடம் கொடுக்கலாம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து விண்ணப்ப படிவ வினியோகம் இன்று தொடங்கியது.
இதில், கடந்த 2016 பொது தேர்தலில் திமுக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில், ஜெயலலிதாவுக்கு எதிராக போட்டியிட்ட சிம்லா முத்து சோழன், மனுவை பெற்றுள்ளார். மீண்டும் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதாக அவர் தெரிவித்தார்.