சட்டசபையில் எடியூரப்பா உருக்கமாக பேசிகிட்டு இருக்கும்போதே தூங்கி வழிந்த சித்தராமையா

Asianet News Tamil  
Published : May 19, 2018, 04:56 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
சட்டசபையில் எடியூரப்பா உருக்கமாக பேசிகிட்டு இருக்கும்போதே தூங்கி வழிந்த சித்தராமையா

சுருக்கம்

siddaramaiah sleeping while yeddyurappa speaking in assembly

பொது நிகழ்ச்சிகளிலும் பொது மேடைகளிலும் தூங்கி வந்த கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த முக்கியமான சட்டமன்ற கூட்டத்திலும் தூங்கி வழிந்தார்.

சில பொது நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்ட மேடைகளில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பலமுறை தூங்கியுள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக கல்புர்கியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடையில் சித்தராமையா தூங்கினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இப்படி தூங்குவதற்கு பெயர்போன சித்தராமையா, நாடே உற்றுநோக்கிய கர்நாடக சட்டமன்ற கூட்டத்திலும் எடியூரப்பா பேசிக்கொண்டிருந்த போது தூங்கினார். பெரும்பான்மை இல்லாமல் கர்நாடக முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா, உச்சநீதிமன்ற உத்தரவின்படி பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக மாலை 3.30 மணியளவில் கர்நாடக சட்டசபை கூடியது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சட்டசபை செயல்பாடுகள் ஊடகங்களால் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

கர்நாடக அரசியல் சூழல் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. கர்நாடக சட்டசபையில் என்ன நடக்கிறது என்பதை ஊடகங்கள் வாயிலாக நாடே நேரலையில் கவனித்தது. 

சட்டசபை கூடியதும், உரையாற்ற தொடங்கிய எடியூரப்பா, உருக்கமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் பேசினார். நாடே உற்றுநோக்கும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சட்டசபை கூட்டத்தில் எடியூரப்பா பேசிக்கொண்டிருந்தபோது, சித்தராமையா தூங்கினார். அவரைப்போலவே மஜத எம்.எல்.ஏ எச்.டி.ரேவண்ணா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ எச்.கே.பாட்டீல் ஆகியோரும் தூங்கினர். 

PREV
click me!

Recommended Stories

ஈரானில் 153 நகரங்களில் 1,000 இடங்களில் தாக்குதல்.. சூறையாடும் அமெரிக்க-இஸ்ரேல்..!
திமுக ஆட்சியில் ரத்த ஆறு.. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வக்கில்லாத முதல்வர்.. இபிஎஸ் ஆவேசம்!