காசு கொடுத்தாலும்... கண்ணீர் வடிச்சாலும்... ஆட்சி இல்லை பா.ஜ.கவின் வெற்றியை அடித்து நொறுக்கிய காங்கிரஸ்

Asianet News Tamil  
Published : May 19, 2018, 04:42 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
காசு கொடுத்தாலும்... கண்ணீர் வடிச்சாலும்... ஆட்சி இல்லை பா.ஜ.கவின் வெற்றியை அடித்து நொறுக்கிய காங்கிரஸ்

சுருக்கம்

eddyurappa resign chief minister post

கர்நாடகாவில் 117 எம்எல்ஏக்கள் ஆதரவை கொண்டுள்ள மஜத - காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்காமல் ஆளுநர் வஜூபாய் வாலா பாஜகவின் எடியூரப்பாவை அழைத்தார்.

வெறும் 104 எம்எல்ஏக்களின் ஆதரவை மட்டுமே வைத்துக்கொண்டு எடியூரப்பா கர்நாடக முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்றார். தனிபெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜக ஆட்சியமைத்தது.

இதனை எதிர்த்து மஜத- காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வாக்கெடுப்பில் வெற்றி பெற பா.ஜ.கவுக்கு 8 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை

காலை பதினொரு மணிக்கு  எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு தொடங்கியது.  இந்நிலையில் காலையில் எடியூரப்பா - காங்கிரஸ் எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய ஆடியோவும் வெளியானது. 

உணவு இடைவேளைக்கு பின் சட்டப்பேரவை மீண்டும் கூடியது. புதிய எம்.எல்.ஏக்கள் உறுதிமொழி ஏற்பு தொடர்ந்து நடந்தது.அதன் பின் எடியூரப்பா சட்டப்பேரவையில் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே  உரையாற்றத் தொடங்கினார்.  

காங்கிரஸின் தவறான ஆட்சிக்கு எதிராக மக்கள் பா.ஜ.கவுக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்றும் காங்கிரஸ்-மஜதவின் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் குடிநீர் பிரச்சனையை கூட காங்கிரஸால் தீர்க்க முடியவில்லையென குற்றம் சாட்டினார்.

விவசாயிகளுக்கு கடைசி மூச்சு உள்ள வரை கர்நாடாக விவசாயிகளுக்குக்காக பாடுபடுவேன் என உருக்கமாக பேசியவர்  நம்பிக்கைவாக்கு கோருவார் என்று எதிர்பார்த்த நிலையில் வாக்கெடுப்புக்கு முன்னரே ராஜினாமா செய்தார் எடியூரப்பா. பேரவையிலிருந்து வெளியேறினார் எடியூரப்பா

 மூன்றுநாள் இன்னும் சொல்லப்போனால் வெறும் 56 மணிநேரம் மட்டுமே முதல்வராக இருந்துள்ளார் எடியூரப்பா. பெரும்பான்மையுள்ள காங்கிரஸ் தலைமையில் மஜத தலைவர் குமாராசாமி முதல்வர் பதவியேற்பார் எனத் தெரிகிறது. 

பணத்தால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயன்றும் அது வெற்றி பெறாத நிலையில்  பா.ஜ.க கண்ணீர் உரையுடன் தன் முதல்வர் பதவியை விட்டு விலகியது.

 

PREV
click me!

Recommended Stories

ஈரானில் 153 நகரங்களில் 1,000 இடங்களில் தாக்குதல்.. சூறையாடும் அமெரிக்க-இஸ்ரேல்..!
திமுக ஆட்சியில் ரத்த ஆறு.. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வக்கில்லாத முதல்வர்.. இபிஎஸ் ஆவேசம்!