இந்தி ஒரு நாட்டின் மொழி.. ! ”ஒரே நாடு.. ஒரே மொழி..” அமைச்சர் பொன்முடிக்கு பதிலடி கொடுத்த சிவசேனை எம்.பி..

By Thanalakshmi VFirst Published May 14, 2022, 10:09 PM IST
Highlights

இந்தியா முழுவதும் இந்தி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அது நாட்டின் மொழி எனவும் சிவசேனை கட்சி எம்.பி சஞ்சய் ரெளத் கூறியுள்ளார். அனைத்து மாநிலங்களிலும்‌ ஒரே மொழி இருக்க வேண்டும்‌ என்பதை மத்திய உள்துறை அமைச்சர்‌ அமித்‌ ஷா சவாலாக எடுத்து கொள்ள வேண்டும்‌ என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்தியா முழுவதும் இந்தி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அது நாட்டின் மொழி எனவும் சிவசேனை கட்சி எம்.பி சஞ்சய் ரெளத் கூறியுள்ளார். அனைத்து மாநிலங்களிலும்‌ ஒரே மொழி இருக்க வேண்டும்‌ என்பதை மத்திய உள்துறை அமைச்சர்‌ அமித்‌ ஷா சவாலாக எடுத்து கொள்ள வேண்டும்‌ என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஆங்கிலத்திற்கு பதில்‌ இந்தியை மாற்று மொழியாக ஏற்று கொள்ள வேண்டும்‌ என மத்திய உள்துறை அமைச்சர்‌ அமித்‌ ஷா சமீபத்தில் பேசியிருந்தார். இதற்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த அரசியல்‌ தலைவர்கள்‌ கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்‌. மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கும் வேலையை கைவிட வேண்டும் என்றும் பிராந்திய மொழிகளை பலவீனப்படுத்தும்‌ முயற்சி இது என்றும்‌ சாடினர்‌. மேலும் உள்துறை அமைச்சரின் இந்த பேச்சு பெரும் விவாத பொருளாக மாறியது.

மேலும் படிக்க: minister Ponmudi about Hindi: இந்தி பேசுபவர்கள் பானிபூரி விற்கிறார்கள்... ஒரே போடாக போட்ட அமைச்சர் பொன்முடி!!

இந்நிலையில் நேற்று கோவை பாரதியார் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்ட தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்தி தெரிந்தவர் பானிபூரி தான் விற்கிறார் எனும் வகையில் பேசிய பேச்சு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்தி படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று பலர் நிலைக்கிறார். ஆனால் "கோயம்புத்தூரில்‌ பானி பூரி விற்பது யார்‌?" என இந்தி பேசும்‌ வியாபாரிகளை மறைமுகமாக கிண்டலடித்தார்‌.இதனிடையே இதுகுறித்து சிவசேனை கட்சியின்‌ நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய்‌ ரெளத் பதிலடி கொடுத்துள்ளார். 

அவர் பேசுகையில்,” இந்தி என்பது நாடு முழுவதும் எற்றுக்கொள்ளப்பட்ட மொழி. அது ஒரு நாட்டின் மொழி. நான் நாடாளுமன்றத்தில்‌ பேசும் போதெல்லாம் இந்தியில் தான் பேசுவேன். ஏனென்றால் நான் சொல்வதை நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் கேட்க வேண்டும். இந்தி திரையுலகம்‌ நாட்டிலும்‌ உலகிலும்‌ செல்வாக்கு செலுத்துகிறது. எந்த மொழியையும்‌ அவமதிக்கக்கூடாது" என்றார்‌.

அனைத்து மாநிலங்களிலும்‌ ஒரே மொழி என்ற இந்த சவாலை மத்திய உள்துறை அமைச்சர்‌ அமித்ஷா ஏற்க வேண்டும்‌. ஒரே நாடு. ஒரே அரசியலமைப்பு, ஒரே சின்னம்‌ என்பது போல் ஒரே மொழி மட்டுமே இருக்க வேண்டும்‌ என்று கருத்து தெரிவித்துள்ளார்.  மேலும் மும்பையில் இந்தாண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. அங்கு வட மாநிலத்தவர்களே அதிகம் என்பதால் அவர் இவ்வாறு பேசிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில்,  மகாராஷ்டிரத்தில்‌ உள்ள பணிகளை வட மாநிலத்துவர்களும்‌ தென்‌ மாநிலத்தவர்களும்‌ பறித்து கொள்வதாகக்‌ கூறி, 1960களில்‌, சிவசேனை தொடர்‌ பரப்புரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 
 

மேலும் படிக்க: இந்தி தெரிந்த திமுக அமைச்சர்கள் பானிபூரி விற்பார்களா..? இது ஒரு வெட்கக்கேடு.. பதிலடி கொடுத்த குஷ்பு...

click me!