
அழகு நிலையத்தில் பெண்கள் உடன் விபச்சாரத்தில் ஈடுப்பட்ட தமிழக பட்டாலியன் காவலர்கள் இருவரை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மசாஜ் செண்டர் என்ற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபட்டுவருவோர் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் சென்னையில் இது போன்ற மசாஜ் செண்டர்களில் போலீசார் அடிக்கடி ரெய்டுகள் நடத்தி குற்றச் செயலில் ஈடுபடுவோரை கையும் களவுமாக பிடித்து தண்டித்து வருகின்றனர். இதை போல ஆண்டை மாநிலமாக புதுச்சேரியிலும் தற்போது மசாஜ் சென்டர் விபச்சாரம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் நெல்லிதோப்பு பகுதியில் இயங்கி வரும் ஒரு அழகு நிலையத்தில் விபசாரம் நடப்பதாக உருளையான்பேட்டை போலிசார்க்கு தகவல் வந்ததை அடுத்து அங்கு சென்ற போலிசார் அழகு நிலையத்தில் இருந்த 5 பெண்கள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் அழகு நிலையம் நடத்தி வந்த செந்தில்குமார் மற்றும் வாடிக்கையாளர்கள் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் வினோத் (32), நட்ராஜ் (31) ஆகியோர் தமிழ்நாடு பட்டாலியன் போலீஸ் என தெரியவந்தது இதனை அடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரை போலிசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற்த்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டிருந்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.