படித்த முட்டாள் என்பதை அடிக்கடி காட்டுகிறார்... அண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி!!

Published : Sep 08, 2022, 09:47 PM IST
படித்த முட்டாள் என்பதை அடிக்கடி காட்டுகிறார்... அண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி!!

சுருக்கம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படித்த முட்டாள் என்பதை அடிக்கடி காட்டிக்கொள்வதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படித்த முட்டாள் என்பதை அடிக்கடி காட்டிக்கொள்வதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு வேலை வெட்டி இல்லாத நபர். அவர் படித்த முட்டாள் என்பதை அடிக்கடி காட்டிக் கொள்வார். அவரைப் போலவே அவரது கட்சியின் மாவட்ட தலைவரும் செயல்படுகிறார். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள சரத்துகளை தெளிவாக படித்துப் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ள ஓ.பி.எஸ்… பாதுகாப்பு வழங்கக்கோரி மனு!!

படித்து பார்க்க தெரியவில்லை என்றால் படித்த வழக்கறிஞர் ஒருவரிடம் அது பற்றி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 50,000 மின் இணைப்புகள் இன்னும் இரண்டு வார காலத்தில் தமிழக முதல்வர் துவக்கி வைப்பார் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: இபிஎஸ் அதிமுக அலுவலகம் செல்வது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.. தலையில் அடித்துக் கதறும் பெங்களூரு புகழேந்தி.

முன்னதாக கரூர் மாவட்டத்தில் உள்ள 67 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு பயின்ற 4019 மாணவர்கள், 4458 மாணவிகள் உட்பட மொத்தம் 8477 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு 8,477 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 4 கோடியே 30 லட்சத்து 52,661 மதிப்பிலான மிதிவண்டிகளை வழங்கினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!