
சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கரூரில் டிடிவி தினகரன் அணி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட திட்டமிட்டனர். ஆனால் அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து டிடிவி ஆதரவாளர் செந்தில்பாலாஜி உயர்ந்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்பும், விழா நடத்த அனுமதி அளிக்க மறுத்து ஜன.23-ம் தேதி நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.
ஆகவே, அனுமதி மறுத்த நகராட்சி ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதோடு, மைதானத்தில் திட்டமிட்டபடி ஜன.27 முதல் 29 வரை விளையாட்டுப்போட்டி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதித்து இடைக்கால உத்தரவிட வேண்டும்.
அதோடு நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிய அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் செந்தில் பாலாஜி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.