
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் செல்பி எடுக்க முயன்ற நபரின் செல்போனை தட்டி விட்டு அமைச்சர் சிவகுமார் கோபமடைந்தார்.
கர்நாடக மாநிலத்தில் மின்துறை அமைச்சராக இருப்பவர் டி.கே. சிவக்குமார். இவருக்கு யாரேனும் செல்பி எடுக்க வந்தால் கோபமாகிவிடுவார். அவர்கள் செல்களை தட்டிவிட்டு உடைத்தும் விடுவார்.
இதுபோன்றுதான் சில நாட்களுக்கு முன்பு அம்மாநிலத்தில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று பெல்காமில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக சிவக்குமார் கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர், அமைச்சர் சிவக்குமாருடன் இணைந்து செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது அமைச்சர் சிவக்குமார் செல்ஃபி எடுக்க முயன்ற நபரின் கையை வேகமாக தட்டிவிட்டு தாக்கினார். இதுகுறித்த வீடியோ வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், தற்போதும் அதுபோன்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது. பொது நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சிவக்குமாருடன் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார். அப்போது அவரின் செல்போனை தட்டிவிட்டு அமைச்சர் கோபமுற்றார். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.