
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு 3 அல்லது 4 பேர் ஒன்றும் செய்யாமல் இருந்துள்ளனர் என்றும், இது விபத்தா அல்லது சதியா என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த 2 ஆம் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்து பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து ஏற்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை இன்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேநிய அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முதலில் தீ, புகை கிளம்பிய போது அங்கு இருந்த மூன்று அல்லது நான்கு பேர் ஒன்றும் செய்யாமல் இருந்துள்ளனர் என்றும் இதனால் இது விபத்தா அல்லது சதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
. தீ விபத்து நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் எங்கு உள்ளன என்ற கேள்வி எழுந்துள்ளது. குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல, கோவில்கள், அறநிலைய துறையிடம் சிக்கியுள்ளன என்று தெரிவித்தார்.
. இந்த தீ விபத்து உச்சகட்ட பாவச்செயல் என்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த எச்.ராஜா வேறு . மாற்று வழிபாட்டு தலங்களில் பாதிப்பு ஏற்பட்டால் ஊளையிடும் அரசியல்வாதிகள் இப்போது எங்கே போனார்கள் என கேள்வி எழுப்பினார்.
கோவில் வளாகத்தில் கடைகள் இருக்க கூடாது என இந்து முன்னணி 1992ம் ஆண்டு முதல் போராடி வருகிறது ஆனால் கோவில் நிர்வாகம் அதை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடைகளை யாருக்கு ஒதுக்கியுள்ளனர் என்ற விவரங்களை அதிகாரிகள் உடனே வெளியிட வேண்டும் என்றும் எச்.ராஜா கேட்டுக் கொண்டார்.