உன்னைய மாத்திக்க பேபிம்மா!: காத்துவாக்குல...

First Published Feb 5, 2018, 12:30 PM IST
Highlights
please change your charector deepa


மசாலா இல்லாத உணவு மந்தமான உணவுதான். காரசாரம், எண்ணெய், மிளகு, வற்றல், உப்பு என்று நறுக், சுருக் சமாசாரங்கள் நான்கைந்து இருந்தால்தான் அந்த சாப்பாடே சுவைக்கும். அதேபோலத்தான் மீடியாவும். வெறும் நிகழ்வுகளை மட்டுமே பதிவு செய்வது மட்டுமே அதன் பணியல்ல.

’காத்துவாக்குல’ கேட்ட சில சென்சேஷனல் தகவல்களையும் பொதுவெளியில் பகிர வேண்டும். அப்போதுதான் செய்தி கச்சேரி களைகட்டும். இந்த காத்துவாக்குல செய்திகளில் சிலவை உண்மையாகவும்! சிலவை உண்மைக்கு நெருக்கமாகவும், இன்னும் சிலவோ உண்மைக்கு எதிர் நிலையிலும் இருக்கலாம். ஆனாலும் கிடைத்ததை பகிர்வோம், காரணம் அவை விளைவுகளை ஏற்படுத்தக்கூடியன எனும் எண்ணத்தில்தான்...

*    அமைச்சர் பாஸ்கரனின் மகன் பாலா, நிழல் அமைச்சராக செயல்படுவதாக சிவகங்கை மாவட்ட அரசு அதிகாரிகள் புலம்பத் துவங்கியுள்ளனர்.

*    மாஜி தி.மு.க. அமைச்சர் கே.என்.நேருவின் அரிசி ஆலையில் சமீபத்தில் ரெய்டு நடந்தது. திருச்சியில் இந்த ரெய்டு நடைபெற்றது போல் கோயமுத்தூரில் அவரது நிறுவனம் சார்பாக பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் மிகு மெகா சைஸ் அப்பார்ட்மெண்ட் பற்றியும் புகார்களாம். வருமான வரித்துறையின் கார்களை கூடிய விரைவில் அங்கே பார்க்கலாம் என்கிறார்கள்.

*    மத்திய பி.ஜே.பி. அமைச்சர்களை தொடர்ந்து வம்புக்கு இழுத்துப் பேசி வரும் சுப்பிரமணியன் சுவாமியை உடனடியாக கட்சியை விட்டு கழற்றிவிட வேண்டுமென்று உள்குரல்கள் அக்கட்சியில் கேட்க துவங்கிவிட்டன.

*    கட்சியினருடன் மாவட்ட வாரியாக ஸ்டாலின் நடத்தி வரும் கள ஆய்வின் போது வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனுக்கள் குவிகிறதாம். ‘கட்டிங்’வாங்கிவிட்டு இந்த புகார் மனுக்களை அறிவாலய நிர்வாகிகள் யாரும் காணாமல் போக்கடித்துவிடக் கூடாது என்பதில் குறியாய் இருக்கிறாராம் ஸ்டாலின். அதனால் அவை ஒவ்வொரு நாளும் சீல் செய்யப்பட்டு, அவரது அறையில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறதாம்.

*    தனது புத்தகத்தில், 2ஜி ஒதுக்கீடு விஷயத்தில் மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரம் ஆகியோரின் நடவடிக்கைகள் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார் ராசா. ஆனால் இதுபற்றி அவர்களிருவரும் வாய் திறக்காமல் இருப்பது பி.ஜே.பி.யை ஆச்சரியப்படுத்தியுள்ளதாம்.

*    கட்சியில் தினகரனுக்கு ஆதரவே இல்லை! என்று கூறிவிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகளை பழனிசாமியும் - பன்னீரும் நீக்கும் விவகாரத்தை அரசியல் விமர்சகர்கள் கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர்.

*    தன் ரசிகர் மன்றத்தினர் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்ததால் ரஜினி மன்றத்தின் லோகோவில் இருந்த ‘பாம்பு’ நீக்கப்பட்டுள்ளது.

*     கோயமுத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி கைது விவகாரம், பரப்பன சிறையில் உள்ள சசிகலாவை அதிர்ச்சியுற வைத்ததாம்! இங்கே கொட்டினால் அங்கே நெரி கட்டுவது ஏனோ!?

*    கவர்னர் மாளிகை அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் நீண்ட நாட்களாக கோலோச்சிக் கொண்டிருக்கும் போலீஸ் மற்றும் நிர்வாக அதிகாரிகள் மாற்றமும் நடைபெறும் என்கிறார்கள்.

*    தீபாவின் செயல்கள் ஜெயலலிதா சேர்த்து வைத்திருந்த பெயரையும், கம்பீரத்தையும் சேதப்படுத்துவதாக அவரது உறவினர்கள் வருத்தப்பட்டிருப்பதோடு, ‘உன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

click me!