"கட்சியில் இருந்து ஓரம் கட்ட சதி நடக்கிறது": தினகரனை எச்சரித்த செங்கோட்டையன்!

 
Published : Apr 15, 2017, 03:51 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
"கட்சியில் இருந்து ஓரம் கட்ட சதி நடக்கிறது": தினகரனை எச்சரித்த செங்கோட்டையன்!

சுருக்கம்

sengottayan warning ttv dinakaran

முதல்வர் பழனிசாமி, தினகரன் கட்டுப்பாட்டில் இருந்து விலகி வெகு நாட்கள் ஆகிவிட்டன. தினகரன் எது சொன்னாலும் அவர் கேட்பது இல்லை. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரைடு குறித்த தினகரன் அறிக்கை விட சொல்லியும், அவர் பேசாமல் இருந்து விட்டார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிட திறப்பு விழாவிற்கு, அமைச்சர் விஜயபாஸ்கரை செல்லவிடாமல் தடுத்து, அமைச்சர் ஜெயக்குமாரை அனுப்பி உள்ளார் முதல்வர் எடப்பாடி.

அத்துடன், அம்பேத்கர் பிறந்த நாளான நேற்று, சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த எடப்பாடி, அந்த தகவலை கூட தினகரனிடம் சொல்லாமல் தவிர்த்திருக்கிறார் 

அதனால், அமைச்சர் செங்கோட்டையன், தினகரனை அழைத்து வந்து, கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வைத்துள்ளார்.

அதன் பின்னர், தினகரனிடம் தனியாக பேசிய செங்கோட்டையன், எடப்பாடியின் செயல்பாடுகள், நடராஜனுடன் அவர் தொடர்ந்து பேசி வருவது குறித்தும் போட்டு கொடுத்துள்ளார்.

குறிப்பாக, கட்சியில் குடும்ப ஆதிக்கம் வரக்கூடாது என்பதற்காக, குடும்ப உறவுகளை நீங்கள் ஒதுக்கி வைத்திருந்தீர்கள். ஆனால், அவர், தொடர்ந்து உங்கள் சித்தப்பா நடராஜனிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்.

எடப்பாடி கொடுத்த தகவலை, உங்கள் சித்தப்பா நடராஜன் ஒரு பத்திரிகையாளரிடம் சொல்ல, அவர் வருமானவரி துறையில் அதை போட்டுக் கொடுத்துள்ளார். அதை தொடர்ந்தே விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு நடந்துள்ளது, இது உளவுத்துறையின் ரிப்போர்ட் என்றும் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

மேலும், இடைத்தேர்தலில் கடைசி கட்டத்தில் உங்களுக்கே வெற்றி வாய்ப்பு இருந்தது. அதனால், நீங்கள் ஜெயித்தால் முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று அஞ்சி, தேர்தலை நிறுத்த ஏற்பாடு செய்தவரே எடப்பாடிதான் என்றும் கூறி உள்ளார்.

அதை எல்லாம் பொறுமையாக கேட்ட தினகரன், எங்கள் குடும்பத்திலேயே எனக்கு எதிரிகள் இருக்கும்போது, மற்றவர்கள் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது? என்று வெறுத்து போய் பேசியுள்ளார்.

அத்துடன், என்ன நடந்தாலும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அதனால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.  அடுத்தவரை அழிக்க கையேந்தும் ஆயுதம், அவர்களையே திருப்பி தாக்கும் என்று ஞானி போலவும் பேசி இருக்கிறார் தினகரன். 

PREV
click me!

Recommended Stories

பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்
கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்