தினகரனை பதவி விலக சொன்ன அமைச்சர்கள்: பின்னணியில் இருந்து இயக்குவது யார்?

 
Published : Apr 15, 2017, 02:49 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
தினகரனை பதவி விலக சொன்ன அமைச்சர்கள்: பின்னணியில் இருந்து இயக்குவது யார்?

சுருக்கம்

ministers demanding dinakaran to resign

யாரோ ஒருவன் யோசிக்கிறான், அவன் சொன்னதை நாங்கள் வாசிக்கிறோம் என்று, தினகரனுக்கு எதிராக பேசும் அளவுக்கு வந்துவிட்டனர் பல அமைச்சர்கள்.

எடப்பாடி அமைச்சரவையில், அவரது ஆதரவாளர்கள், தினகரன் ஆதரவாளர்கள், பொதுவானவர் என்று மூன்று பிரிவாக அமைச்சர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

எனினும், தினகரனை எதிர்த்து பேசும் அளவுக்கு தைரியம் இல்லாதவர்களாகத்தான் அனைவரும் இருந்து வந்தனர். ஆனால், அந்தப்போக்கு தற்போது முற்றிலும் மாறிவிட்டது.

கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றுவதற்காக, நீங்கள் உங்கள் துணை பொது செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று  தினகரனிடம்  அமைச்சர்கள் வெளிப்படையாகவே கூறிவிட்டனர்.

அந்த அளவுக்கு அவர்களுக்கு யார் தைரியம் கொடுத்தது என்று கேள்வி எழாமலா இருக்கும்?. அந்த கேள்விக்கு, பிறகுதான் விடை கிடைத்தது.

அமைச்சர் விஜயபாஸ்கர் ரைடு விவகாரத்தை அடுத்து, நம்மை எப்போது ரைடு விடப்போகிறார்களோ? என்ற அச்சத்தில் பல அமைச்சர்கள் தூக்கம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

அதில் சிலர், பழைய நட்பின் அடிப்படையில், பன்னீர்செல்வம் தரப்பினரை சந்தித்து, ரைடு விஷயத்தில் கொஞ்சம் கருணை காட்ட சொல்லுமாறு கேட்டுள்ளனர்.

அதை தமக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட பன்னீர் தரப்பினர், அவர்களில் சிலரை நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு வரவழைத்து, சில அசைன்மெண்டுகளை கொடுத்துள்ளனர்.

அத்துடன், நீங்கள் இப்போது எங்கள் அணிக்கு வரவேண்டாம், அதற்கு பதில், அங்கேயே இருந்து, உறவாடி கெடுத்தாலே போதும் என்று கூறியதுடன், அதை செய்தால், ரைடு வராமல் பார்த்துக் கொள்கிறோம் என்றும் கூறி இருக்கின்றனர்.

அதன் பிறகுதான், தினகரனையே பதவி விலக சொல்லும் அளவுக்கு அமைச்சர்களுக்கு துணிவு வந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!
நான் தவிர்த்த நூல் ஒன்று உள்ளது... அது ‘பூணூல்’..! ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவம்