"விரைவில் தீபா என் அருமையை உணருவார்" - மாதவனின் விசித்திர பேச்சு

 
Published : Apr 15, 2017, 03:13 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
"விரைவில் தீபா என் அருமையை உணருவார்" - மாதவனின் விசித்திர பேச்சு

சுருக்கம்

deepa will understand me says madhavan

மாதவனை வீட்டிற்குள் வரவேண்டாம் என தீபா விரட்டியடித்தையடுத்து என்னைப்பற்றி தீபா விரைவில் உணருவார் என மாதவன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரின் அண்ணன் மகள் தீபா அரசியல் களத்தில் குதித்தார்.

தொடர்ந்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பையும் உருவாக்கி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தொடங்கினார். அதுவரை தீபாவிற்கு பக்கபலமாக நின்ற அவரது கணவர் மாதவன் தீபாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்தார்.

இதற்கு காரணம், மாதவன் முன்வைத்த நபர்களின் பெயர்கள் தீபாவின் நிர்வாகிகள் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை என்றே தெரிகிறது.

ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து புது கட்சி தொடங்க போவதாகவும், தீபா பேரவையை விட்டு விலகி விட்டதாகவும் அறிவித்தார் மாதவன்.

பின்னர், என்ன மாற்றம் நடந்ததோ தெரியவில்லை திடீரென தீபாவை முதல்வராக்கியே தீருவேன் என பேட்டியளித்தார்.

இவ்வாறு மாதவன் மாறிமாறி பேசியது மக்களை மட்டுமில்லாமல் தீபாவை குழப்பத்திற்கு ஆளாக்கியது.

இதனால் ஆத்திரமடைந்த தீபா மாதவனை வீட்டிற்குள் வரகூடாது என கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று தமிழ் புத்தாண்டு தினத்தன்று தீபாவை சந்திக்க மாதவன் சென்றுள்ளார்.

அப்போது தீபா ஆதரவாளர்களுக்கும் மாதவன் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்கு வாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதில் மாதவனை வீட்டிற்குள் வரகூடாது என தீபா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாதவன் கூறியதாவது:

எனது மனைவி தீபாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.  தமிழ் புத்தாண்டு காரணமாகவே தீபாவிற்கு வாழ்த்து கூற சென்றேன்.

அப்போது வெளியே தொண்டர்களுக்கிடையே சில வாக்கு வாதங்கள் நடந்தது உண்மை. ஆனால் வேண்டுமென்று சிலர் இப்படி வதந்தியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

சிலர் தங்கள் சுயலாபத்துக்காக எனக்கும் தீபாவுக்கும் பிரச்சனை என்று பரப்பி விடுகிறார்கள். என்னைப் பற்றி என் மனைவியின் மனசாட்சிக்கு தெரியும்.

தீபாவை சுற்றி நல்லவர்கள் போல் நடந்து வெளியே என்னை பற்றி தவறாக கிளப்பி விடுகிறார்கள். தீபா என்னைப்பற்றி விரைவில் உணருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்