ஆர்டர்லிகளை உடனே அலுவல் பணிக்கு அனுப்புங்க.. போலீஸ் உயர் அதிகாரிகளை அதிரவிட்ட டிஜிபி சைவேந்திரபாபு.

By Ezhilarasan BabuFirst Published Aug 13, 2022, 6:04 PM IST
Highlights

ஆர்டர்லிகளை உடனே திரும்பப் பெற வேண்டும் இல்லையென்றால் கடும் நடவடிக்கை  எடுக்கப்படுமென அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
 

ஆர்டர்லிகளை உடனே திரும்பப் பெற வேண்டும் இல்லையென்றால் கடும் நடவடிக்கை  எடுக்கப்படுமென அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட ஆர்டர்லி முறை  இன்னும் பின்பற்றப்படுவது வெட்கக் கேடானது என நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்த நிலையில் டிஜிபி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் ஆங்கிலேயர் காலம்தொட்டு காவல்துறையில் ஆர்டர்லி முறை என்ற அடிமை முறை பின்பற்றப்பட்டு வருகிறது. காவல்துறையில் பணியில் சேரும் காவலர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீடுகளில் பணியாளர்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அரசு ஊழியர்களான காவலர்களை தங்களது வீடுகளின் பணியாளர்களாக பயன்படுத்துவது குற்றம், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் வீடுகளில் பணியாற்றும் ஆர்டர்லி காவல்துறையினரை திரும்பப்பெற வேண்டுமென ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: “ஜெயலலிதா இருந்திருந்தால்.. செருப்படி விழுது தலைவரே.!” குமுறும் திமுகவினர் !

ஆனால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை தலைவரும் தொடர்ந்து மௌனம் சாதித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நாடு 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் நிலையில், ஆங்கிலேயர்களின் காலத்தில் பின்பற்றப்பட்ட ஆர்டர்லி முறை இன்னும் பின்பற்றப்படுவது வெட்கக்கேடானது,

இதையும் படியுங்கள்:  பாஜகவில் எந்த அங்கிகாரமும் இல்ல.. எனக்கு பாதுகாப்பும் இல்ல.. முருகன் கோவில் வாசலில் குமுறிய எஸ்.வி சேகர்.

நினைத்தால் ஒரு வார்த்தையில் ஒழிக்க முடியும், ஆனால் தமிழக அரசும் தமிழக காவல்துறை தலைவரும் அந்த வார்த்தையை சொல்ல முன்வரவில்லை என வேதனை தெரிவித்தார். இந்நிலையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆர்டர்லிகளை திரும்ப பெறுவது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது ஆர்டர்லிகளை உடனடியாக அலுவலக பணிகளுக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்,  இதை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது அவர்  தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  

 

click me!