பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் நெருக்கடி.!ஆர்எஸ்எஸ் ஊதுகுழலாக செயல்படும் ஆர்.என்.ரவி.!-காங்கிரஸ்

By Ajmal Khan  |  First Published Jul 10, 2023, 7:30 AM IST

எந்த மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லையோ அங்கெல்லாம் சர்ச்சையான கருத்தை, பரபரப்பை உருவாக்கி, நெருக்கடியை ஏற்படுத்தும் வேலைகளை ஆளுநர்கள் செய்வதாக விமர்சித்துள்ள செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் ஊதுகுழலாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 
 


தமிழக அரசோடு மோதும் ஆளுநர்

தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இதனையடுத்து குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில் ஆளுநர் பதவியில் தொடர ஆர்.என்.ரவிக்கு எந்த வித தகுதியும் இல்லையென கூறியுள்ளார். இந்த கருத்தை திமுகவின் கூட்டணி கட்சிகள் வரவேற்றுள்ளன.

Tap to resize

Latest Videos

இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், ஆளுநர் என்கிற ஏஜெண்டுகளை இறக்கி இணையாட்சி செய்யும் வேலையை ஒன்றிய அரசு செய்கிறது. எந்த மாநிலங்களில் எல்லாம் பாஜக ஆட்சியில் இல்லையோ அங்கெல்லாம் சர்ச்சையான கருத்தை, பரபரப்பை உருவாக்கி, நெருக்கடியை ஏற்படுத்தும் வேலைகளை ஆளுநர்கள் செய்கிறார்கள்.

ஆளுநரை திரும்ப பெற வேண்டும்

அதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ். & பாஜகவின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார்.தமிழ்நாடு ஆளூநர் ஆர்.என்.ரவியின் பணி என்பது அரசமைப்புச் சட்டப்படியாக இருப்பதை, இயங்குவதை கவனிப்பதே அவரின் முக்கியமான பணி. ஆனால் அதைச் செய்யாமல் தேவையில்லாத அரசியல் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் எந்த ஒரு ஆளுநரும் இவ்வளவு சர்ச்சையாக பேசியதில்லை.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து இன்று மாண்புமிகு குடியரசு தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார், இந்த புகார் கடிதத்தின் மீது குடியரசு தலைவர் அவர்கள் விரைந்து ஒரு நல்ல முடிவெடுத்து தமிழகத்தில் தொடர்ந்து குழப்பம் விளைவித்துவரும் ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

BJP Vs DMK : முதல்வருக்கு 14 கேள்விகள்.. அண்ணாமலை போட்ட லிஸ்ட் - ஆடிப்போன திமுக தலைமை..!

click me!