ஆளுநர் ரவிக்கு செக் வைக்கும் திமுக.! நேரடியாக களத்தில் இறங்கிய ஸ்டாலின்- டெல்லிக்கு பறந்த கடிதம்

By Ajmal Khan  |  First Published Jul 9, 2023, 2:50 PM IST

ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், ஆளுநர் தொடர்பாக புகார் தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசு தலைவர் திரௌபதி முர்முக்கு 15 பக்க கடிதம் எழுதியுள்ளார்.  


ஆளுநரும் தமிழக அரசும்

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியானது கடந்த 2021ஆம் ஆண்டு பதவியேற்றது. இதனையடுத்து அடுத்த ஒரு சில மாதங்களிலேயே தமிழகத்திற்கு புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே அமைதியாக சென்ற  நட்பு, நாட்கள் செல்ல செல்ல மோதலை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் தமிழக அரசின் திட்டங்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார் ஆளுநர் ரவி. இதனையடுத்து நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலைமையை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார் , அப்போது தொடங்கிய பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது.

Tap to resize

Latest Videos

விஸ்வரூபம் எடுத்த செந்தில் பாலாஜி விவகாரம்

இதனையடுத்து தமிழ்நாட்டை தமிழகம் என மாற்ற முயற்சி, தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் உள்ளதை வாசிக்காமல், புதிய வார்த்தைகளை சேர்த்து படித்தது, கல்லூரி நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை வெளிப்படுத்துவது என மோதல் அதிகரித்தது. இந்த நிலையில் அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என கோரி முதலமைச்சருக்கே ஆளுநர் கடிதம் எழுதியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் அடுத்த கட்டமாக செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்து திமுகவினருக்கு அதிர்ச்சியை உண்டாக்கினார். இது போன்ற மோதல்களால் குடியரசு தலைவருக்கு ஏற்கனவே திமுக எம்பிக்கள் ஆளுநருக்கு எதிராக கையெழுத்திட்டு கடிதம் கொடுத்தனர். திமுக கூட்டணி கட்சியினரும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

குடியரசு தலைவருக்கு முதல்வர் பரபரப்பு கடிதம்

இந்தநிலையில் திமுக எம்பிக்கள், அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் மட்டுமே ஆளுநருக்கு எதிராக போரட்டம் மற்றும் புகார் தெரிவித்திருந்த நிலையில், ஆளுநர் ரவியின் நடவடிக்கைக்கு எதிராக குடியரசு தலைவர் திரௌபதி முர்முக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கடந்த 2 வருட காலத்தில் தமிழக ஆளுநர் சட்ட விதிகளுக்கு எதிராக செயல்பட்டது. அரசின் செயல்பாட்டிற்கு எதிராக பேசியது என பல குற்றச்சாட்டுகள் முன் வைத்து 15 பக்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்த கடிதத்தில் ஆளுநர் ரவிக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

இதையும் படியுங்கள்

பாஜகவை எதிர்ப்பதால் திமுக ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும், அதைப்பற்றி இம்மியளவும் கவலையில்லை - முதலமைச்சர் ஸ்டாலின்

click me!