நீட் தேர்வை ரத்து செய்ய இங்க போராடி என்ன பயன்.? குடியரசு தலைவர், பிரதமர் வீடு முன்பாக நடத்தனும்- செல்லூர் ராஜூ

By Ajmal Khan  |  First Published Aug 17, 2023, 2:44 PM IST

அதிமுக மாநாடு நடைபெறும் நாளில் திமுக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்தது சீப்பான, தரக்குறைவான செயலாகும் என செல்லூர் ராஜூ விமர்சித்தார்.


அதிமுக மாநில மாநாடு- ஏற்பாடுகள் தீவிரம்

மதுரையில் ஆகஸ்ட் 20 ல் நடைபெறும் அதிமுக பொன்விழா மாநாடு விளம்பர அனுமதி தொடர்பாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதனை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக மாநாடு தொடர்பாக டிஜிட்டல் வேன் பிரச்சாரத்திற்கும், பலூன் பறக்க விடுவதற்கும் அனுமதிக்காக தொடர்ந்து போராடி வருவதாக கூறினார். கடந்த வாரம் அனுமதிக்காக காவல்துறையிடம் மனு கொடுக்கப்பட்டது. இதுவரை எந்த வித முடிவும் கிடைக்கவில்லையென தெரிவித்தார். மேலும் மதுரையில் மாநாட்டிற்கு முன்னதாக பேரணி செல்லும் நேரத்தையும், தூரத்தையும் மாற்றும் படி காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். 

Tap to resize

Latest Videos

நீட்டிற்கு தமிழகத்தில் போராடி என்ன பயன்.?

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக மாநாடு நடைபெறும் நாளில் திமுக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்தது சீப்பான, தரக்குறைவான செயலாகும் என விமர்சித்தார். நீட் தேர்வு ரத்து செய்ய தமிழகத்தில் போராட்டம் நடத்துவது எந்தவொரு பயனுமில்லை, திமுக நீட் தேர்வை ரத்து செய்ய குடியரசு தலைவர், பிரதமர் வீடு முன்பாக தான் போராட்டம் நடத்த வேண்டும், திமுக கூட்டணியில் இருந்த போது தான் நீட் தேர்வு நடைமுறை கொண்டு வரப்பட்டது, நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மக்களிடத்தில் நம்பிக்கையை பெற முடியாது, மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள், திமுகவின் நாடகத்தை நம்ப மாட்டார்கள்" என செல்லூர் ராஜூ கூறினார்.

இதையும் படியுங்கள்

தனித்து விடப்பட்ட பாஜக... நாடாளுமன்ற தேர்தலில் மோடி ஆட்சி இந்துக்களாலேயே தூக்கி எறியப்படும்.!- திருமாவளவன்

click me!