ஜெயலலிதாவுக்கு பிடித்த தலைவர் திருமாவளவன்..! அதிமுக கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம்- செல்லூர் ராஜூ

By Ajmal Khan  |  First Published Mar 10, 2023, 8:01 AM IST

அதிமுக தலைவர்களை பற்றி யார் தவறாக பேசினாலும் தக்க பதிலடி கொடுப்போம் பாஜகவினருக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு

சிவகங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரைக்கு வருகை தர உள்ளார். அப்போது மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும், பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலிலும் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதனை தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். இந்த நிலையில் அவருக்கு அதிமுகவினர் வரவேற்பு அளிப்பது குறித்து மதுரை கோரிப்பாளையம் கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Latest Videos

ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு.! காதுகள் இல்லை- இறங்கிய அடிக்கும் மு.க. ஸ்டாலின்

அதிமுக பக்கம் மக்கள் உள்ளனர்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரைக்கு வந்தாலே எடப்பாடி பழனிச்சாமிக்கு வெற்றி மேல் வெற்றி வருகிறது. இரட்டை இலை சின்னமும், கட்சி தீர்ப்பும் மதுரை வந்த போது தான் கிடைத்தது.தற்போது மதுரைக்கு வருவதால் இன்னும் மிகப்பெரிய வெற்றி எடப்பாடி பனிச்சாமிக்கு கிடைக்கும். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சிக்கு எது ஆரோக்கியமானதோ அதை பற்றிய ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவித்தார். மக்கள் அதிமுக பக்கம் இருக்கிறார்கள். எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள், அதை வாக்குகளாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசித்ததாக கூறினார். பாஜகவினர் அதிமுகவை விமர்சித்து வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,

ஜெயலலிதாவோடு ஒப்பிட யாரும் இல்லை

தோழமை கட்சிக்குள் இதுபோன்று நடப்பது சகஜமான ஒன்று. இனிமேல் இதுபோன்று இருக்காது என பாஜகவினர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார், இதுபோன்ற மோதல் போக்கு 2011 ஆம் ஆண்டு  காங்கிரஸ் திமுக கூட்டணிக்குள்ளும் இருந்ததாக தெரிவித்தார். எங்கள் தலைவர் ஜெயலலிதாவோடு ஒப்பிட யாரும் கிடையாது. அவரை போன்ற தலைவர் யாரும் உருவாகவும் இல்லை. உருவாகவும் முடியாது. கூட்டணி என்பது கட்சி கொள்கை அல்ல. கூட்டணி வச்சுக்கலாம், மாற்றலாம், சேரலாம் அதைப்பற்றி ஒன்றும் கிடையாது.

திருமாவளவன் வந்தால் வரவேற்போம்

எங்கள் தலைவர்களை பற்றி யார் பேசினாலும் தேவையில்லாமல் விமர்சனம் செய்தால் தகுந்த பதிலடி கொடுப்போம் என எச்சரித்தார். அதிமுக பலவீனத்தோடு இல்லை. மோடி சிறப்பாக செயல்படுகிறார். தமிழை உலக அரங்கிற்கு கொண்டு சேர்க்கிறார். இப்போதைக்கு அதிமுக பாஜக இந்தப்பிரச்சனை ஒன்றும் இல்லை. இனிமேல் பேசினால் தகுந்த பதிலடி கொடுப்போம் என தெரிவித்தார். யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். திருமாவளவன் எங்கள் சகோதரர். அவரை கூட்டணியில் சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். தென்மாவட்டத்தில் ஜெயலலிதாவுக்கு பிடித்த தலைவர் திருமாவளவன் என கூறினார்.

இதையும் படியுங்கள்

 தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்.! 14 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்.! திமுகவினரை அலறவிடும் அண்ணாமலை

click me!