இத்தனை நாட்கள் தெர்மகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமிரில் பேசக் கூடாது என பா.ஜ.,வுக்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
இத்தனை நாட்கள் தெர்மகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திமிரில் பேசக் கூடாது என கூறிய அமர் பிரசாத் ரெட்டிக்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகளான சிடிஆர். நிர்மல்குமார், திலீப் கண்ணன் ஆகியோர் சமீபத்தில் வெளியேறி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களுக்கு இடையே கருத்து மோதல் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க;- இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.. பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறதா? இல்லையா? ஜெயக்குமார் பரபரப்பு தகவல்..!
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுகவினர் பாஜகவில் இணைந்த போது இனித்தது, பாஜகவினர் அதிமுகவில் இணையும்போது கசக்கிறதா? பாஜகவினரிடம் சகிப்புத்தன்மை இல்லை என்று விமர்சித்தார். ஒரு கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைவது என்பது இயல்பானது. பாஜகவினருக்கு இதனை ஏற்க ஜீரன சக்தி இல்லை. ஊர்க்குருவி உயரப்பறந்தாலும் பருந்தாகாது. அதுபோல, எவனாலும் ஜெயலலிதாபோல ஆக முடியாது. எனவே அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை என தெரிவித்தார். மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்ள கூடாது என செல்லூர் ராஜூ அட்வைஸ் செய்தார். இந்நிலையில், செல்லூர் ராஜூவின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான அமர் பிரசாத் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க;- 2 நாளில் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்படுவார்.? நாஞ்சில் சம்பத் பரபரப்பு தகவல்
இதுதொடர்பாக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- வாய்க்கொழுப்பின்றி பேசுவது; திமிரின்றி நடந்து கொள்வது என்பது குறித்தெல்லாம் வகுப்பெடுக்க மதுரையில் விரைவில் கல்லூரி துவங்கப் போறாராம் செல்லூர் ராஜு. நெருங்கிய நட்பில் இருக்கும் யாராவது அங்க ஒரு ’சீட்’ வாங்கிக் கொடுங்கப்பா.
இத்தனை நாட்கள் தெர்மகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமிரில் பேசக் கூடாது என பா.ஜ.,வுக்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை மதுரை மண்டல அதிமுக ஐடி விங் பொறுப்பாளர் ராஜ் சத்யன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அண்ணன் செல்லூர் ராஜூ 10 வருடம் கூட்டுறவுத்துறை அமைச்சர், 3 முறை தொடர்ந்து சட்டமன்றஉறுப்பினர், மக்கள் பிரதிநிதியாக ஒருமுறையாவது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு அவரின் வளர்ச்சி புரிந்திருக்கும்!
அண்ணன் ,
10வருடம் கூட்டுறவுத்துறைஅமைச்சர்,
3முறை தொடர்ந்து சட்டமன்றஉறுப்பினர்,
மக்கள் பிரதிநிதியாக ஒருமுறையாவது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால்
உங்களுக்கு அவரின் வளர்ச்சி புரிந்திருக்கும்!
தரம் தாழ்ந்து பேசுவது அழகல்ல,ஆயுதத்தை நீங்கள்தான் தேர்வு செய்கிறீர்கள்,கவனம் https://t.co/eMaPP21UQe
தரம் தாழ்ந்து பேசுவது அழகல்ல, ஆயுதத்தை நீங்கள்தான் தேர்வு செய்கிறீர்கள், கவனம் என பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டிக்கு ராஜ் சத்யன் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.