
ஆன்லைன் ரம்மி தடை மசோதா விவகாரத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது ஏற்புடையதல்ல என்று சட்டத்துறை அமைச்சா் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி சூதாட்டத்துக்கு தடைச் சட்டம் மீண்டும் நிறைவேற்றினால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்பது தான் சட்டம். இந்த சட்டம் 2 ஆவது முறையாக நிராகரிக்கப்படவில்லை, இது முதல் முறைதான். சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக நிராகரிக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
இதையும் படிங்க: சவுதி அரேபியாவில் உயிரிழந்த தமிழக தொழிலாளி… வெளியுறவுத்துறை அமைச்சரிடம் உதவிக்கோரிய அண்ணாமலை!!
ஆன்லைன் ரம்மி சட்ட மசோதா விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைன் ரம்மி திறன் மேம்பாட்டு விளையாட்டு என கூறி ஆளுநர் நிராகரித்துள்ளார். திறமையின் அடிப்படையில் விளையாடக்கூடிய விளையாட்டு ஆன்லைன் ரம்மி இல்லை. ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க: அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பு... கூட்டணி தொடருமா? கே.பி.முனுசாமி கூறுவது என்ன?
இந்த சட்ட மசோதா வரும் பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படும். இந்த சட்ட விஷயத்தில் ஆளுநர் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளித்துள்ளோம். மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது ஏற்புடையதல்ல. ஆன்லைன் ரம்மி விளையாடி 4 மாதத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 12 பேர் உயிழப்புககு யார் காரணம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.